புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஆசை மருமகளுக்காக ஓகே சொன்ன பாண்டியன்.. செந்தில் கதிர் சேர்ந்து ஆடப்போகும் ஆட்டம், மாட்டிக்கொண்ட சரவணன்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், மீனா வாங்கி வைத்திருக்கும் கிப்டை எப்படியாவது மீனாவின் அப்பாவிடம் கொடுத்து விட வேண்டும் என்று செந்தில், மீனாவை வற்புறுத்தி கூட்டிட்டு போகிறார். போனதும் வாசலில் நின்ற செந்தில் நீ மட்டும் உள்ள போய் கொடுத்துட்டு வா. என்னை பார்த்தால் கடுப்பாகி அதிகமாக கோபப்பட வாய்ப்பு இருக்கிறது என்று மீனாவை அனுப்பி வைக்கிறார்.

அதன்படி வீட்டுக்குள் போன மீனா அம்மாவை பார்த்து பேசிய பிறகு அப்பா வந்ததும் அந்த கிப்ட் பிறந்தநாள் பரிசாக கொடுக்கிறார். அதை வாங்கிய மீனாவின் அப்பா தூக்கி தூர எரிந்து, என்னை அவமானப்படுத்திவிட்டு அந்த மளிகை கடை வீட்டுக்கு மருமகளாக போய் என்னை அசிங்கப்படுத்தி விட்டாய். இப்பொழுது இதெல்லாம் கொடுத்தால் என் மனசு மாறி விடுமா என்று மீனாவை நோகடித்து பேசி விட்டார்.

கமுக்கமாக இருந்து காரியத்தை சாதித்த பாண்டியனின் மருமகள்

இதனால் அழுது கொண்டே வெளியே வந்த மீனாவை செந்தில் சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். பிறகு கதிரை சந்தித்து செந்தில் பேசிக்கொண்டு வருகிறார். அப்பொழுது மீனாவின் கஷ்டத்தை நான் தான் போக்க வேண்டும். அதனால் அவா அப்பா ஆசைப்பட்ட மாதிரி நான் எக்ஸாம் எழுதி கவர்மெண்ட் வேலைக்கு போகப் போகிறேன் என்று சொல்கிறார்.

இதை கேட்டு அதிர்ச்சியான கதிர், உன்னால் முடியும் நீ முயற்சி பண்ணு என்று நம்பிக்கையாக பேசுகிறார். அப்பொழுது செந்தில் இதைப்பற்றி இப்போதைக்கு யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொல்கிறார். அதே மாதிரி கதிரும், நானும் எனக்கு வாரத்தின் இரண்டு நாள் லீவில் கார் டிரைவர் ஆக வேலைக்கு போகிறேன். அதன் மூலம் அப்பாவுக்கு நான் தருகிறேன் என்று சொன்ன பணத்தை கொடுத்து விடுவேன்.

ஆனால் நான் இப்படி ஒரு வேலைக்கு போவதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று இருவரும் கைகோர்த்து சத்தியம் வாங்கிக் கொள்கிறார்கள். இப்படி இவர்கள் இரண்டு பேரும் சுய கௌரவத்துடன் வேலைக்கு போக ஆரம்பித்து விட்டால் பாண்டியனின் கொட்டமும் அடங்கிவிடும். இனி அவரிடம் அடிமையாக இருக்கவும் தேவையில்லை. ஆனால் பாவம் அப்பா பேச்சைக் கேட்டுக் கொண்டு தங்கமயிலை கல்யாணம் பண்ணின சரவணன் நிலைமைதான் பாவமாக இருக்கிறது.

அதாவது எப்படியாவது சரவணனை கைவசம் வைத்துக் கொள்ளணும் என்று தங்கமயில் பிளான் பண்ணி ஹனிமூன் போவதற்கு கேட்டிருக்கிறார். அதுவரை உடம்பு சரியில்லை என்று ரூம்குள்ளே அடைந்து கிடக்கிறார். இதை பயன்படுத்தி தங்கமயிலின் அம்மா பாக்கியம், பாண்டியன் வீட்டிற்கு மகளை பார்க்க வருகிறார். வந்ததும் தங்கமயிலிடம் பேசிய பிறகு பாண்டியனிடம் ஹனிமூன் பற்றி சொல்கிறார்.

பாண்டியனும், ஆசை மருமகள் ஆசைப்பட்டு விட்டாள் என்று தெரிந்ததும் எந்தவித மறுப்பும் தெரியாமல் உடனே சரி என்று சொல்லி விடுகிறார். இதனை அடுத்து பாக்கியம், மகளிடம் இதுதான் மாப்பிள்ளையை தனியாக கூட்டிட்டு போக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதை பயன்படுத்தி மாப்பிள்ளைக்கு சொக்குப்பொடி போட்டு நீ என்ன சொன்னாலும் தலையாட்டர பொம்மை மாதிரி மாத்தி வச்சுக்கோ என்று மட்டமான ஐடியாக்களை கொடுக்கிறார்.

இதை கேட்ட தங்கமயிலும் சரி சரி என்று தலையாட்டிக்கொள்கிறார். ஆக மொத்தத்தில் இவர்களைப் பற்றி தெரியாமல் சரவணன், தங்கமயிலிடம் சிக்கி மாட்டிக் கொண்டார். ஆனால் பாண்டியன் மாதிரி ஒரு ஆளுக்கு இப்படி ஒரு மருமகள் தேவைதான் என்று சொல்வதற்கு ஏற்ப நல்ல வச்சு செய்யப் போகிறார்கள். அதன் பிறகு தான் தெரியப்போகிறது மீனா மற்றும் ராஜியின் அருமை.

பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த சம்பவங்கள்

Trending News