வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

காட்டுத்தனமாக ஒர்க் அவுட் செய்யும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்.. வாய்ப்புக்காக தீயாக செய்யும் வேலை

Pandian Stores: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியல் சமீப காலமாக கொஞ்சம் போர் அடித்தாலும் வரவேற்பு குறையாமல் தான் சென்று கொண்டிருக்கிறது.

அந்த வகையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள் ஜிம்மில் தீயாக ஒர்க்கவுட் செய்யும் போட்டோ ஒன்று சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலை பொருத்தவரை ஆரம்பத்தில் காண்பித்த நான்கு அண்ணன் தம்பிகள் கேரக்டர் மாறாமல் நடித்து வருகின்றனர்.

Also read: இந்த வார டிஆர்பி யில் முதல் 6 இடத்தை பிடித்த சீரியல்.. எதிர்நீச்சலை பின்னுக்கு தள்ளிய டிவி எது தெரியுமா?

ஆனால் முல்லை, ஐஸ்வர்யா கதாபாத்திரங்கள் தான் அவ்வப்போது மாற்றப்பட்டு வருகிறது. அதில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா மரணம் அடைந்ததை தொடர்ந்து காவ்யா அந்த கேரக்டரில் நடித்து வந்தார். தற்போது அவர் மாற்றப்பட்டு அந்த கேரக்டரில் லாவண்யா நடித்து வருகிறார்.

அந்த வகையில் காவ்யா தற்போது பெரிய திரையில் கவனம் செலுத்தி வருகிறார். ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர் ஹீரோயின் வாய்ப்புக்காக தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அதற்காகவே அவர் இப்போது காட்டுத்தனமாக ஒர்க்அவுட் செய்து தன் உடலை ஃபிட்டாக மாற்றி வருகிறார்.

Also read: தூங்கு மூஞ்சி அருணை நினைத்து புது மாப்பிள்ளையே வெறுக்கும் ஆதிரை.. எக்ஸ் காதலியே பார்க்க மறுத்த ஜீவானந்தம்

மேலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் காவ்யா சமீப காலமாக படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சீரியலில் அடக்க ஒடுக்கமாக இருந்த பெண்ணா இவர் என்று வியக்கும் வகையில் இருக்கிறது அவருடைய சமீப கால செயல்பாடுகள்.

ஒர்க் அவுட் செய்யும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்

kavya-actress
kavya-actress

ஆனால் இப்படி இருந்தால் மட்டுமே வாய்ப்பை பெற முடியும் என்பதை தெரிந்து வைத்திருக்கும் காவ்யா தற்போது ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் போட்டோக்களையும் வெளியிட்டுள்ளார். மேலும் சமீபகாலமாக உடற்பயிற்சி செய்வதற்கு அடிக்ட் ஆகிவிட்டதாகவும் இவர் தெரிவித்துள்ளார். இப்படி கடும் முயற்சி எடுத்து வரும் காவ்யாவிற்கு ஹீரோயின் வாய்ப்புகள் வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Also read: மறுஜென்மம் பெற்ற தனம்.. இறுதி அத்தியாயத்தை நோக்கி பாண்டியன் ஸ்டோர்ஸ்

Trending News