வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

நடுத்தெருவுக்கு வரப்போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. மூர்த்திக்கு மீள முடியாமல் விழும் அடுத்த அடி

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகளின் பாசப்பிணைப்பு அழகாக கட்டுவதால், இந்த சீரியல் சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமடைந்துள்ளது. இருப்பினும் இதில் மாதத்திற்கு  ஏதாவது ஒரு பிரச்சினையை எடுத்து  கொண்டு அதை வைத்தே ஜவ்வு போல் இருப்பதுதான் சிலரை கடுப்பாக்குகிறது.

அந்தவகையில் இந்த மாதத்தில் என்ன பிரச்சினையை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கையிலெடுத்து இருக்கிறது என்றால், முல்லைக்கு இயல்பாக கருத்தரிக்கும் வாய்ப்பு இல்லாததால் செயற்கை முறையில் கருத்தரிப்பு  செய்வதற்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் 5 லட்சம் ரூபாய் பணத்தை அவசரமாக  பிரட்ட வேண்டிய நிலையில் இருக்கிறது.

இதற்காக மூர்த்தி கந்துவட்டி முதல் மீட்டர் வட்டி வரை எவ்வளவு வட்டியாக இருந்தாலும் பரவாயில்லை என்று யாரை பார்த்தாலும் அவர்களிடம் கடன் வாங்கும்  நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

இந்தப் பிரச்சினை எழுவதற்கு முன்பு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தனித்தனியாக தங்குவதற்கு சரியான அறை இல்லாததால், புதிய வீடு கட்ட திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் இப்பொழுது முல்லைக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டதால், அவள் கோயில் கோயிலாக சென்று தன்னையே வருத்திக் கொள்வது குடும்பத்தில் இருப்பவர்களுக்கு பார்ப்பதற்கே கஷ்டமாக இருப்பதால் 5 லட்சத்தை உடனடியாக பிரட்டி இந்த பிரச்சினையிலிருந்து முல்லையை மீட்டெடுக்க வேண்டுமென நினைக்கின்றனர்.

இருப்பினும் இதற்காக மூர்த்தி கடன் வாங்குவது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை ஆண்டி ஆகிவிடுமோ என்றும்  வீட்டிலிருக்கும் மற்ற மருமகள் நினைக்கின்றனர்.

Trending News