வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சுக்குநூறாக உடையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. ஓவர் அலப்பறையா இருக்கே

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் என்று சொல்வதை விட மற்றவர்களை அண்டி தான் பிழைக்க வேண்டும் என்று சொல்லும் விதமாகத்தான் இப்பொழுது கதைகள் அமைந்து வருகிறது. அதாவது ஒற்றுமையா கூட்டுக் குடும்பத்தில் இருப்பது வேற எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அது ஒருவருடைய பொறுப்பில் இருந்து தான் குடும்பம் நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது வேறு. ஆனால் இதை தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மூர்த்தி, தனம் செய்து ஓவர் அலப்பறையை கூட்டி வருகிறார்கள்.

அதனால் தான் இவ்வளவு பிரச்சனைக்கும், குழப்பத்திற்கும் காரணமாக இந்த நிலைமைக்கு வந்து நிற்கிறது. அதாவது ஒரு சூழ்நிலைக்கு பிறகு ஒவ்வொருவருடைய தேவைகளும் வித்தியாசமாக இருக்கும் அதைப் புரிந்து கொண்டு நடப்பது தான் அந்த குடும்பத்தில் உள்ள தலைவரின் முக்கிய பொறுப்பு. அதை விட்டு போட்டு நான் தான் எல்லாருடைய தேவைக்கும் கணக்கு பார்த்து பணம் தருவேன் என்று கூறுவது குடும்பத்தில் இருப்பவர்களின் மன கஷ்டத்தை தான் அதிகரிக்க செய்யும்.

Also read: குணசேகரன் மாட்டிக் கொண்டு முழிக்கும் தருணம்.. ஜான்சிராணி இடம் சிக்குவாரா?

ஏற்கனவே இந்த மாதிரி கஷ்டங்களையும், அவமானங்களையும் சந்தித்ததால் ஜீவா பொறுமையே இழந்து அனைவரும் முன்னாடியும் பொங்கி எழுந்தார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திடம் இருந்து ஜீவா மற்றும் மீனா பிரிந்து விட்டார்கள். அடுத்ததாக இதற்கு காரணமாக இருந்தது  கண்ணன் தான் என்று தனம் அவனிடம் ஏன் இப்படி செய்த கண்ணா என்று கேட்கும் போது ஐஸ்வர்யா நிறுத்துங்க அக்கா. என்ன எல்லாரும் நினைச்சுட்டு இருக்கீங்க ஆளுக்கு ஆள் உங்க இஷ்டப்படி பேசிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கிறாள்.

மண்டபத்தில் எல்லாரும் முன்னாடியும் கண்ணனை மூர்த்தி மாமா கை நீட்டி அடித்தது எங்களுக்கு எவ்வளவு பெரிய அவமானம் என்று நீங்கள் யாரும் யோசிக்கவில்லை. இதுவே அந்த இடத்தில் கதிர் மற்றும் ஜீவா மாமா அவர்களை இவங்க இப்படி அடிச்சிருப்பாங்களா. எங்கள கேட்பதற்கு யாரும் இல்லை என்று தானே இப்படி பண்றீங்க என்று ஆவேசமாக பேசுகிறாள். இதையெல்லாம் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத முல்லை, நீ முதலில் பேசுவதை நிப்பாட்டு என்று அவர் பங்குக்கு வந்து பேசுகிறார்.

Also read: சுடிதாரில் கெத்து காட்டும் பாக்யா, ஷாக் ஆன கோபி.. அடுத்த டாஸ்க்கை இறக்கும் ராதிகா

உடனே நீங்க இரண்டு பேரும் என்ன அவ்வளவு பெரிய நல்லவங்களா என்று கேட்கிறார். பின்பு இதுவரை மறைத்து வைத்த கண்ணன் சம்பளத்தை எல்லாரும் முன்னாடியும் போட்டு உடைத்து விட்டார். கண்ணனை பார்த்து உனக்கு சம்பளம் 40 ஆயிரம் ஆனால் 17,000 மட்டும் தான் மாமாவிடம் கொடுத்துவிட்டு மீதி பணத்தை நீதானே உன் தேவைக்காக வச்சுக்கிட்ட என்று கேட்கிறாள். உடனே இதைக் கேட்ட மூர்த்தியும், தனமும் அதிர்ச்சியில் கண்ணனை பார்க்கிறார்கள்.

அதற்கு ஐஸ்வர்யா ஆமாம் மொத்த பணத்தையும் உங்ககிட்ட கொடுத்துக்கிட்டு ஒவ்வொரு விஷயத்துக்கும் உங்ககிட்ட வந்து கைகட்டி நிக்கணுமா என்று கேட்கிறாள். அத்துடன் இந்த வீட்டில் நாங்கள் நிறைய அட்ஜஸ்ட் பண்ணிட்டு கஷ்டப்பட்டு தான் இருக்கிறோம் என்று அவளுடைய சுய ரூபத்தை காட்டி விட்டாள். உடனே மூர்த்தி அப்படி கஷ்டப்பட்டு இந்த வீட்டில் யாரும் இருக்க வேண்டாம் வீட்டை விட்டு வெளியே போங்க என்று கூறி விட்டார். அடுத்தபடியாக ஜீவாவை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சுக்கு நூறாக பிரிந்து விட்டது.

Also read: கடைக்குட்டியால் பிரியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. எரிகிற நெருப்பில் பெட்ரோலை ஊற்றிய மீனாவின் அப்பா

Trending News