புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இப்படி ஒரு களவாணியா? குறுக்கு புத்தியால் சுக்கு நூறாகும் மானம் மரியாதை

Pandian Stores: விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ஒரு காலகட்டத்தில் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். ஆனால் இப்போது இயக்குனர் அரைத்த மாவையே அரைத்து புளிக்க வைத்து விட்டார். அதுவும் ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் கொடுக்கும் அலப்பறையால் ரசிகர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டனர்.

எதுக்கு எடுத்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் கவுரவம் என்று பேசிக் கொண்டிருப்பார் மூர்த்தி. இப்போது அந்த குடும்பத்தில் களவாணியாக இருக்கும் ஒருவர் கோர்ட், கேஸ் வரை சென்று விட்டு வீடு திரும்பி உள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸின் கடைக்குட்டி பிள்ளையான கண்ணன் வங்கியில் வேலை பார்த்து வந்தார்.

Also Read : கமலால் தாமதமாகும் பிக் பாஸ்.. கேஎஸ் ரவிக்குமாரை லாக் செய்த விஜய் டிவி

ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் ஆடம்பரமாக இருந்ததால் எக்கச்சக்க கடனில் அவதிப்பட்டு வருகிறார்கள். இதை சரி கட்ட வேண்டும் என்பதால் வங்கியில் லஞ்சம் வாங்கி விட்டார் கண்ணன். இது வெட்ட வெளிச்சமாக போலீஸ் வரை கண்ணன் சென்று விட்டார். அந்த நேரத்தில் தான் ஐஸ்வர்யாவுக்கு அதிர்ச்சியில் பிரசவ வலி வர பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

அதன் பிறகு கண்ணனும் ஒரு வழியாக ஜாமினில் இருந்து வெளியே வந்து விட்டார். கண்ணனின் குறுக்கு புத்தியால் பாண்டியன் ஸ்டோர்ஸ் மானம் சுக்கு நூறானதால் மூர்த்தி கண்ணனிடம் பேச மறுக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் இரவு நேரத்தில் தனது தம்பிகளான ஜீவா மற்றும் கதிரிடம் கண்ணீர் மல்க பேசுகிறார்.

Also Read : வந்த சுவடே தெரியாமல் ஊத்தி மூட போகும் விஜய் டிவி சீரியல்.. டிஆர்பி இல்லாததால் எடுத்த அதிரடி முடிவு

ஆனால் எவ்வளவு பட்டாலும் ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் திருந்துவார்களா என்பது சந்தேகம்தான். ஒரு பக்கம் தனத்திற்கு இருக்கும் பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்காக தெரிய வருகிறது. மீனாவுக்கு மட்டுமே தெரிந்த உண்மை இப்போது அவர் வழியாக முல்லைக்கு தெரிய வருகிறது.

மேலும் இந்த நோய்க்கு கண்டிப்பாக சிகிச்சை இருக்கிறது அதை மேற்கொள்ளலாம் என தனத்தை சமாதானப்படுத்துகிறார் முல்லை. ஆனால் தனது கடமைகளை விரைந்து முடிந்து விட்டு அதன் பிறகு தான் சிகிச்சை மேற்கொள்வேன் என்ற தனம் இருக்கிறார். மேலும் இவ்வாறு இறுதி கட்டத்தை நோக்கி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் சென்று கொண்டிருக்கிறது.

Also Read : பிக்பாஸ் எல்லாம் எனக்கு முக்கியம் இல்ல.. விஜய் பட நடிகை பின்னால் போன விஜய் டிவி ரக்சன்

Trending News