ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அண்ணாமலை ரேஞ்சுக்கு சவால்விட்ட கதிர், முல்லை.. தலையை விட்டு மாட்டிகொண்ட சக்காளத்தி

விஜய் டிவியில் குடும்ப தொடராக ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர். தற்போது கதிரின் ஹோட்டலுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒருவருக்கொருவர் தெரியாமல் சென்றுவிட்ட வந்துள்ளனர். ஆனால் கடைசியாக சென்ற மீனா மற்றும் ஐஸ்வர்யா எதர்ச்சையாக பார்த்துக்கொள்கிறார்கள்.

இந்நிலையில் முல்லை கடையில் முதல் நாள் வசூல் என்ன என்பதை பார்க்கிறார். அப்போது முல்லையின் அக்கா மற்றும் தனத்தின் சக்களத்தியாக என்ட்ரி கொடுத்திருக்கும் மல்லி பிரச்சனையை தூண்டி விடுகிறார். அதாவது கணக்கு வழக்கை முதலில் பார் என முல்லையிடம் கூறுகிறார்.

ஆனால் முதல் நாளே 1000 ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது பாண்டியன் மெஸ். உடனே மல்லிக்கு சொல்லவா வேண்டும். தொடங்கிய முதல் நாளே நஷ்டம் என்றால் இந்த கடையை ஊத்தி மூட வேண்டிய நிலைமை தான் என வாய்க்கு வந்தபடி சண்டையை தொடங்கி உள்ளார்.

ஒரே மாசத்தில் கடையை லாபத்தில் ஓட வைக்கிறேன் என கதிர் வாக்கு கொடுக்கிறார். உடனே முல்லை ஒரே மாதத்தில் நீங்கள் 50 ஆயிரம் லாபம் எடுத்தால் நீ பெரிய ஆளுன்னு ஒத்துக்குறேன் என மல்லி கதிரிடம் சொடக்கு போட்ட சவால் விடுகிறார்.

அண்ணாமலை ரஜினி ரேஞ்சுக்கு கதிரும் இந்த சவாலை ஏற்று முப்பது நாளுக்குள் 50 ஆயிரம் லாபத்தை எடுத்துக் காட்டுகிறேன் என சவால் விடுகிறார். இந்நிலையில் போன வாரம் முழுக்க சூரிய வம்சம் படத்தை காப்பியடித்த பாண்டியன் ஸ்டோர் தற்போது அண்ணாமலை படத்தை தொடங்கி உள்ளது.

அடுத்ததாக சூரிய வம்சம் படத்தில் ஒரே பாடலில் பணக்காரன் ஆவது போல கதிர் இரவு பகலாக உழைத்து கடையை லாபமடைய செய்திடுவார். மேலும் விட்ட சவாலில் ஜெயித்து மல்லியின் முகத்தில் கரியை பூசயுள்ளார் கதிர். இவ்வாறு சுவாரசியமான திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் செல்ல இருக்கிறது.

Trending News