புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

சூரிய வம்சத்தை மிஞ்சிய பாண்டியன் ஸ்டோர்ஸ்.. சரத்குமாருக்கே டஃப் கொடுத்த மூர்த்தி

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வீட்டை விட்டு வெளியேறிய கதிர், புதிதாக ஹோட்டல் ஒன்றை துவங்கி இருக்கிறார். அதற்கான திறப்பு விழாவில் எப்படி கலந்துகொள்வது என பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருக்கும் மூர்த்தி, தனம், ஜீவா உள்ளிட்டோர் முழித்துக் கொண்டிருக்கின்றனர்.

என்னதான் தம்பி மீது கோபம் இருந்தாலும் புதிதாக தொழிலை துவங்கும் கதிருடன் உறுதுணையாக நிற்க வேண்டுமென அண்ணன் மூர்த்தி விரும்புகிறார். இதற்காக வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாமல் கதிர் உடைய கடைக்கு அருகே சென்று, அங்கு ஒரு குழந்தையின் மூலம் முதல் வியாபாரத்தை தொடங்கியுள்ளார்.

இதை எப்படியோ தெரிந்துகொண்ட கதிர், அண்ணனுக்கு கூடுதல் உணவு பொட்டலங்களை வைத்து, அந்த குழந்தையின் மூலம் கொடுத்து விடுகிறார். மூர்த்தி மட்டுமல்ல ஜீவாவும் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரியாமல் கதிர் உடைய கடை திறப்பு விழாவிற்கு வந்து அவர்களை வாழ்த்தி செல்கிறார்.

இப்படி குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும், ஒருவர் பின் ஒருவராக மற்றவர்களுக்குத் தெரியாமல் வந்து கதிரின் கடை திறப்பு விழாவிற்கு வருவதைப் பார்த்தால் சூரியவம்சம் படத்தை மிஞ்சும் அளவுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பாசத்தை அள்ளி தெளிக்கின்றனர்.

அதிலும் மூர்த்தி தம்பிகளுக்காக உருகுவது சீரியலின் ஹைலைட். ஒருபக்கம் மளிகைக்கடை, மற்றொரு பக்கம் ஹோட்டல் என வியாபாரத்தில் மூர்த்தி குடும்பம் போட்டி போட்டுக்கொண்டு முன்னேறப் போகிறது.

குறிப்பாக ஹோட்டல் தொழிலில் கதிர் சீக்கிரமே நல்ல லாபம் பார்த்து, அவர் சபதம் விட்டது போல் மனைவியின் மருத்துவ செலவிற்காக வாங்கிய 5 லட்சத்தை சீக்கிரம் அடைத்து விட்டு மறுபடியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் ஒன்றாக சேர்ந்து வாழ போகிறார்.

Trending News