வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சர்க்கரை பொங்கலுக்கு வடகறியா.? முல்லையின் அக்கா மகனுக்கு ஜோடியான மீனா

Pandian Stores: விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற தொடர் என்று பார்த்தால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். கூட்டுக் குடும்பத்தின் அருமை பெருமைகளை வருட கணக்கில் பாடி வந்த அந்த சீரியல் தற்போது முடிவுக்கு வந்ததை அடுத்து சீசன் 2வும் ஆரவாரமாக தொடங்கி இருக்கிறது.

அதில் மூர்த்தி ரொம்பவும் ஸ்ட்ரிக்ட் அப்பாவாக எம்டன் நாசரை நினைவூட்டுகிறார். முதல் நாளிலேயே இரு குடும்பத்திற்குள் இருக்கும் பகை, சச்சரவு என ரணகளமாக ஆரம்பித்த இந்த தொடரில் தற்போது வெளிவந்திருக்கும் ப்ரோமோ அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது.

ஏனென்றால் கடந்த சீசனில் ரசிகர்களுக்கு பிடித்த கேரக்டரான மீனா இதிலும் அதே பெயரில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். ஆனால் இந்த முறை அவர் மூர்த்திக்கு மருமகளாக வரப்போகிறார். அதாவது தம்பி மனைவியிலிருந்து இப்போது மகனுக்கு ஜோடியாக அவர் பிரமோஷன் ஆகியிருக்கிறார்.

Also read: வெறிகொண்ட பாம்பாக படை எடுத்து வரும் ஜீவானந்தம்.. தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்ட குணசேகரன்

அதன்படி இரண்டாவது மகனாக வரும் செந்திலுக்கு தான் இவர் ஜோடி ஆகி உள்ளார். அவர் வேறு யாரும் அல்ல முந்தைய சீசனில் முல்லையின் அக்கா மகன் பிரஷாந்தாக வந்தவர் தான். இடையில் அவர் சீரியலை விட்டு விலகிய நிலையில் மீண்டும் வந்துள்ளார். ஆனால் அவர் மீனாவுக்கு ஜோடியாக நடிப்பது கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாமல் இருக்கிறது.

சுருக்கமாக சொல்லப்போனால் சர்க்கரை பொங்கலுக்கு வடகறி போன்று இருக்கிறது. இப்படி அக்கா தம்பி போல் இருக்கும் இவர்களை ஜோடியாக்கி ஆரம்பத்திலேயே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒரு சொதப்பலை சந்தித்து இருக்கிறது. ஆனாலும் போக போக மீனா தன்னுடைய சுட்டித் தனமான நடிப்பினால் இதை சரி செய்து விடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியாக ஆரம்பித்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸில் அப்பாவுக்கு பயந்து நடுங்கும் மகன்களின் வாழ்வு மருமகள்களால் திசை திரும்புமா என்ற ஆர்வமும் ஒரு பக்கம் ஏற்பட்டுள்ளது. ஆக மொத்தம் கே எஸ் ரவிக்குமார், விக்ரமன் பட பாணியில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த சீரியல் இதே ரூட்டில் பயணிக்குமா அல்லது பாரதி கண்ணம்மா 2 போல் ஆட்டம் காணுமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Also read: கோபியிடம் இருந்து பொண்டாட்டியை பிரித்த மாமியார்.. வயிற்றெரிச்சல் படும் ராதிகா

Trending News