புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

சூரியவம்சம் சீனை மிஞ்சும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. மேக்கப்புக்கு கூட காசு இல்லாமல் திரியும் முல்லை,கதிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தற்போது அதிரடி திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது. அதாவது இத்தனை வருஷமாக கட்டிக்காத்து கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருந்து தற்போது மூர்த்தியின் இரண்டாவது தம்பி கதிர் தனது மனைவி முல்லையுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதுவரை தனது மாமியார் வீட்டில் இருந்த கதிர் போது புதுவீட்டுக்கு குடித்தனம் செல்ல உள்ளார். வீட்டுக்கு பொருட்கள் வாங்க வேண்டும் என்பதற்காக முல்லை தனது தாலிச் செயினை கழற்றி கொடுத்து விட்ட மஞ்சள் கயிறை போட்டுக்கொள்கிறார்.

இருவரும் புது வீட்டிற்கு செல்வதற்காக ரோட்டில் நடந்து வரும்போது எதிரே ஜீவா மற்றும் தனம் வருகிறார்கள். அப்போது முல்லையின் கழுத்தில் செயின் இல்லாததை தனம் பார்க்கிறார். அப்போது எதர்ச்சையாக சாவி கீழே விழுந்தவுடன் கதிர் அதை எடுப்பது போல் தனத்திடம் ஆசீர்வாதம் வாங்குகிறார்.

இதைப் பார்த்த உடனே நமக்கு ஞாபகம் வருவது சூரியவம்சம் படத்தின் தேவயானி கலெக்டராக இருக்கும் போது தனது மாமனார் சரத்குமாரிடம் ஆசீர்வாதம் வாங்குவார். அப்படியே விக்ரமனின் சூரியவம்சம் படத்தில் இடம்பெற்ற காட்சியை காப்பி அடித்துள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் இயக்குனர்.

மேலும் புது வீட்டுக்கு போகும் நேரத்தில் தனது அண்ணியை பார்த்தது மிகுந்த சந்தோஷமாக உள்ளதாக முல்லையிடம் கதிர் கூறுகிறார். மேலும் கதிர் பண நெருக்கடியில் இருப்பதை தத்ரூபமாக காட்ட வேண்டும் என்பதற்காக எப்போதும் மேக்கப்புடன் இருக்கும் முல்லைக்கு, சுத்தமாக மேக்கப் இல்லாமல் ரோட்டில் அலையவிட்டு உள்ளார்கள்.

இந்நிலையில் தனத்திடம் ஆசீர்வாதம் வாங்கி விட்டு புது வீட்டிற்கு குடுத்தனம் வர உள்ளார்கள் கதிர், முல்லை ஜோடி. சூரியவம்சம் படத்தை அட்டை காப்பி அடித்து வரும் இயக்குனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Trending News