செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

இரண்டு குடும்பமாக பிரியப் போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. கோபத்தின் உச்சகட்டத்தில் ஜீவா

விஜய் டிவியில் வருகிற சீரியல் பொதுவாகவே குடும்பங்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நாடகம் அண்ணன், தம்பிகளின் ஒற்றுமையை அழகாக எடுத்துக் கூறுவதால் இந்தத் நாடகத்திற்கு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு ஏற்படுத்தி வருகிறது.

அந்த வெற்றியின் காரணமாகவே சமீபத்தில் இந்த நாடகத்திற்கான 1000 எபிசோடுகளை தாண்டி வந்ததால் இதற்காக வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இந்த நாடகத்தின் முக்கிய பலமே கூட்டுக் குடும்பத்தில் வரும் பிரச்சனைகளை சமாளித்து எப்படி சந்தோஷமாக ஒரே குடும்பத்தில் வாழ்வது என்பதை மக்களிடம் போய் சேர வேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்பட்டு வருகிறது.

Also read: ஜீவாவை வச்சு செய்யும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. கதிர் மற்றும் கண்ணனால் பிரியும் சோகம்

ஆனால் இவர்கள் ஒற்றுமையில் அடிக்கடி விரிசல் ஏற்பட்டு வருகிறது. தற்போது வெளிவந்த ப்ரோமோ படி மீனாவின் தங்கை திருமணத்தில் மொய் லிஸ்டில் ஜீவா பெயர் வரவில்லை. எப்பொழுது இவர்களுக்குள் பிரச்சனை வரும் ஜீவா,மீனா தனியாக குடித்தனம் வருவார்கள் என்று கண்கொத்தி பாம்பாக காத்துக் கொண்டிருந்த ஜனார்த்தனுக்கு இந்த விஷயம் ஒரு லட்டு மாதிரி அமைந்திருக்கிறது என்றே சொல்லலாம்.

ஜனார்த்தன் மொய் லிஸ்ட்டை மீனாவிடம் எடுத்துட்டு வந்து இதில் உங்க பேர் மட்டும் தான் வரவில்லை என்று காட்டுகிறார். இதை பார்த்த ஜீவா எரிமலையாய் வெடிக்க ஆரம்பித்து விட்டார். இவ்வளவு நாள் ரொம்பவும் பொறுமையாக குடும்பத்திற்காகவும், அந்த வீட்டிற்க்காகவும் அதிக உழைப்பை போட்டது நம்ம ஜீவா தான் என்று சொன்னால் அவ்வளவு உண்மையானது. ஆனால் அதற்கேற்ற மாதிரி இப்பொழுது அவருக்கு எந்தவித அங்கீகாரமும் கிடைக்காமல் கொஞ்ச நாட்களாகவே அவமானப்பட்டு வருகிறார்.

Also read: கலாச்சாரத்தை சீர்குலைக்கும் ஈரமான ரோஜாவே 2.. லாஜிக்கே இல்லாமல் ஏழரை கூட்டும் சீரியல்

பொறுமையா இருந்த ஜீவா இப்பொழுது மண்டபத்தில் அனைவரும் முன்னாடியும் மூர்த்தியிடம் சரமாரியாக கேள்வி கேட்கிறார். அதாவது நான் உங்களுக்கு என்ன அண்ணன் துரோகம் பண்ணினேன் ஏன் எல்லாரும் முன்னாடியும் என்னை இப்படி அவமானப்படுத்துகிறீர்கள். மொய் விஷயத்தில் என் பெயரும் மீனா பெயரையும் வேண்டும் என்று விட்டு விட்டீர்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் சொத்தில் எனக்கு எதுவுமே இல்லை என்று ஊர் முழுக்க சொல்லிட்டீங்க. அதற்கு மூர்த்தி எனக்கும் இதுக்கும் என்ன சம்பந்தமும் இல்லை என்று கூறுகிறார்.

ஆனால் ஜீவா சும்மா நடிக்காதீங்க அண்ணன் என்று கூறுகிறார். உடனே தனம் எதுவாக இருந்தாலும் வீட்டில் போய் பேசிக்கலாம் வா என்று கூப்பிடுகிறார். அதற்கு ஜீவா என்ன விட்டுருங்க அந்த வீட்டுக்கும் எனக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை. அந்த வீட்டுக்கு நான் இனிமேல் வரமாட்டேன் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் கதிரும், கண்ணனும் தான் உங்க தம்பிங்க இவர்கள் அனைவரையும் கூட்டிட்டு நீங்க இங்க இருந்து முதலில் வெளிய போங்க என்று கூறுகிறார். இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் என்ன நிகழப்போகுது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Also read: தொகுப்பாளிகளில் கில்லாடியாக ஜெயித்துக் காட்டிய 6 பேர்.. விஜய் டிவியை மொத்தமாக குத்தகை எடுத்த பிரியங்கா!

Trending News