செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

அழுகாட்சியாக உருட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. விரைவில் போட உள்ள எண்டு கார்டு

Pandian Stores Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக ஜெயிலுக்குப் போன கண்ணனை ஜாமினில் ஜீவா மற்றும் கதிர் வெளியே கொண்டு வந்து விடுகிறார்கள். கண்ணனை பார்க்கப் பாவமாக இருந்தாலும் தண்டனை முழுமையாக அனுபவிக்காமல் வெளியே வந்தது கடுப்பாக தான் இருக்கிறது.

அதன் பின் வீட்டிற்கு வந்த கண்ணனை ஐஸ்வர்யா பார்த்ததும் ஏன்டா இப்படி பண்ணினாய் என்று கேட்கிறார். எல்லாத்துக்கும் காரணமே இந்த ஐஸ்வர்யா தான் ஆனால் ஒண்ணுமே தெரியாதபோல் கண்ணனை கேள்வி கேட்பது எரிச்சல் ஊட்டுகிறது. ஒழுங்கா இருந்த கண்ணனை கெடுத்து வம்பாக்கியது ஐஸ்வர்யா. ஆனால் மொத்த பலியையும் ஈசியாக கண்ணன் மேல் போட்டு விடுகிறார்.

Also read: உண்மையை மறைக்கும் தனம், மீனா.. செண்டிமெண்ட் சீனயை வைத்து உருட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

அடுத்ததாக மூர்த்தி, கண்ணனை கோபமாக பார்க்கிறார். உடனே கண்ணன் காலில் விழுந்து என்ன மன்னிச்சிடுங்க அண்ணன் என்று கெஞ்சுகிறார். எல்லா தப்பையும் பண்ணிவிட்டு மொத்தமாக ஒரு சாரி கேட்டா எல்லாம் சரியாயிடுமா என்ன. அதுவும் கண்ணன் ஐஸ்வர்யா மாதிரி ஆட்களை பார்த்தாலே வெறுப்பாக தான் இருக்கிறது.

எப்படியும் செண்டிமெண்டாக பேசி மொத்த குடும்பத்தையும் சமாதானப்படுத்தி விடுகிறார். பிறகு கண்ணன் குழந்தையை பார்க்க வேண்டும் என்று கேட்க, உடனே மீனா அந்த குழந்தையை எடுத்துக் கொண்டு வருகிறார். தன்னுடைய குழந்தையை பார்த்த தருணத்தில் கண்ணன் அவருடைய எமோஷனலை காட்டி வருகிறார்.

Also read: ஜனனிக்கு வார்னிங் கொடுக்கும் கௌதம்.. பகல் கனவு காணும் குணசேகரன்

இந்த காட்சியை பார்ப்பவர்களுக்கு கண்ணன் மேல் வெறுப்பு தான் வருகிறதே தவிர, வேற எந்த உணர்வையும் ஏற்படுத்தவில்லை. அவருடைய குழந்தையை தூக்கிக் கொண்டு ஆனந்தத்தில் அழுகிறார். பிறகு கண்ணன் குழந்தையை பார்த்து, நீ பிறக்கும்பொழுது கூட உன் பக்கத்தில் நான் இல்லாமல் போய் விட்டேனே என்று ஒரு தகப்பனாக இருந்து கண்ணீர் விடுகிறார்.

ஆக மொத்தத்தில் கடைசி முடியும் தருவாயில் அழுகாட்சி காட்சியை வைத்து செண்டிமெண்டாக பார்ப்பவர்களை தாக்கி வருகிறார்கள். ஆனால் பார்ப்பவர்களுக்கோ இந்த நாடகத்தை சீக்கிரம் முடித்து விடுங்கள். எத்தனை நாள் தான் கதையே இல்லாமல் உருட்டி கொண்டு வருகிறீர்கள் என்று அவர்களுடைய ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.

Also read: செல்லா காசாக நிற்கும் குணசேகரன்.. கௌதமிடம் மொத்த பொறுப்பையும் ஒப்படைத்த ஜீவானந்தம்

Trending News