வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

கல்நெஞ்சகாரராக மாறிய பாண்டியன், கோபத்தில் இருக்கும் குடும்பம்.. நைசாக பேசி காரியத்தை சாதித்த ராஜி அப்பா

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியனை பழிவாங்க வேண்டும் என்பதற்காக சொந்த தம்பி என்று கூட யோசிக்காமல் பழனிவேலுவின் கல்யாணத்தை நிறுத்தி தம்பியையும் பாண்டியன் குடும்பத்தையும் முத்துவேல் மற்றும் சக்திவேல் அசிங்கப்படுத்தி விட்டார்கள். இந்த அவமானத்தை தாங்க முடியாமல் பழனிவேல் வேதனையை அனுபவித்து வருகிறார்.

இருந்தாலும் இதை மறந்து சகஜமாக இருக்க வேண்டும் என்று பழனிவேலுவின் மனசை மாற்றுவதற்கு செந்தில் கதிர் மற்றும் சரவணன் என அனைவரும் சேர்ந்து வெளியே சுற்றி கலகலப்பாக கொண்டு வருகிறார்கள். பிறகு பாண்டியனும், பழனிவேலுவுக்கு வேறு நல்ல பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று அடுத்த கட்ட மனநிலையில் இருக்கிறார்.

இதை எல்லாம் அடுத்து பாண்டியன், கடை வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் பொழுது பழனிவேலுவின் அம்மா பாண்டியனை சந்தித்து பேசுகிறார். அதாவது நான் உயிரோடு இருக்கும் பொழுது என் பையனுக்கு கல்யாணம் நடப்பதை கண்குளிர பார்க்க வேண்டும். நீங்கள் என்னதான் பழனிவேலுக்கு நல்ல பொண்ணு நல்ல குடும்பம் என்று பார்த்து வைத்தாலும் அவன் உங்க வீட்டில் இருக்கும் வரை என்னுடைய பிள்ளைகள் இரண்டு பேரும் கல்யாணத்தை நடத்த விட மாட்டார்கள்.

அதனால் எனக்கு பழனிவேலுவின் கல்யாணம்தான் முக்கியம் என்பதால் தயவு செய்து என் பையனை என் வீட்டிற்கு அனுப்பி வைத்து விடுங்கள். அப்பொழுதுதான் என்னுடைய மூத்த மகன்கள் இரண்டு பேரும் அவனுக்கு கல்யாணத்தை பண்ணி வைப்பார்கள் என்று பாண்டியனிடம் கெஞ்ச ஆரம்பித்து விட்டார். பாண்டியனும் இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியாமல் ரொம்பவே அதிர்ச்சியாகிவிட்டார்.

இருந்தாலும் பழனிவேலுக்கு கல்யாணம் நடக்க வேண்டும் அதே மாதிரி மாமியார் கேட்ட கொண்ட படியும் அவங்க வீட்டுக்கு போக வேண்டும் என்பதால் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது பழனிவேலுவின் மனசை நோகடிக்கும் விதமாக பாண்டியன் பேசி விடுகிறார். அத்தோடு நீ இங்கே இருந்தது போதும், ஒழுங்கு மரியாதையா உன் வீட்டுக்கு கிளம்பி போய் என்று திட்டி விடுகிறார்.

இதனால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் பழனிவேலுவும் பெட்டி படுக்கையை எடுத்துட்டு கிளம்ப ஆரம்பித்து விடுகிறார். பழனிவேலு இல்லையென்றால் நம்மளுடைய சந்தோசம் இருக்காது என்று எல்லோரும் ஃபீல் பண்ண ஆரம்பிக்கிறார்கள். இருந்தாலும் பாண்டியன் சொன்னதை எதிர்த்து கேட்க முடியாமல் அனைவரும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். ஒருவேளை பழனிவேலு அந்த வீட்டிற்கு போனால் தான் அவனுக்கு கல்யாணம் நடக்கும் என்று பாண்டியனும் முடிவு பண்ணிட்டார் போல.

ஆனால் இதற்கெல்லாம் பின்னணியில் இருந்து பழனிவேலுவின் அம்மாவை பாண்டியனிடம் பேச வைத்ததற்கு முக்கிய காரணம் முத்துவேல் தான். அதாவது நைசாக அம்மாவிடம் பேசி பழனிவேலுவின் கல்யாணத்தை நாங்கள் வேண்டுமென்றே நிறுத்தவில்லை. அவன் ஒன்னும் யாரும் இல்லாத அனாதை இல்லை, மற்றவங்க பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பதற்கு. அண்ணன் என்று நாங்கள் இருக்கும் பொழுது எதற்காக அவன் அங்கே இருந்து கஷ்டப்படணும்.

அதனால் நீங்கள் பேசி எப்படியாவது பழனிவேலுவை இந்த வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விடுங்கள். ஊரே கொண்டாடும் அளவிற்கு நாங்கள் பழனிவேலுவின் கல்யாணத்தை பிரமாண்டமாக நடத்தி அவனுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கிறோம் என்று தாஜா பண்ணி பேசியதால் பழனிவேலுவின் அம்மா, பாண்டியன் பார்த்து எங்க வீட்டுக்கு என் மகனை அனுப்பி வைத்து விடுங்கள் என்று கேட்டிருக்கிறார்.

Trending News