
Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் ஓரளவுக்கு மனசை தேத்திய நிலையில் வீட்டுக்குள் வந்து இருக்கிறார். ஆனால் அரசி மட்டும் சாப்பிடாமல் அழுது கொண்டே அப்பா பேசுங்க பேசுங்க என்று என்று கெஞ்சுகிறார். பாண்டியன் பிடிவாதமாக பேசாமல் இருந்த நிலையில் அரசி, சரவணன் செந்தில் மற்றும் கதிரிடம் அப்பாவை என்னிடம் பேச சொல்லுங்கள் என்று கேட்கிறார்.
அந்த வகையில் கதிர் மற்றும் செந்தில், அரசி இனி எந்த தப்பும் பண்ண மாட்டேன் என்று சொல்றா, பேசுங்கப்பா என இரண்டு பேரும் சொல்கிறார்கள். ஆனால் கோமதி, அரசி செஞ்சதை சொல்லி சொல்லி மறுபடியும் திட்டுகிறார். அரசிக்கு வக்காலத்து வாங்கி பேசிய மீனா மற்றும் ராஜியை கோமதி கடுமையாக பேசி வாயடைக்க வைத்து விட்டார்.
ஆனாலும் மீனா, அரசியை பார்த்தால் ரொம்பவே பாவமாக இருக்கிறது. அவள் நேற்றிலிருந்து சாப்பிடவும் இல்லை, அழுது கொண்டே இருக்காள். தயவு செய்து பேசுங்கள் என்று பாண்டியனிடம் சொல்கிறார். உடனே ராஜ், ஆமாம் அவளை மன்னித்து விடுங்கள், பேசுங்கள் என்று சொல்கிறார். அந்த நேரத்தில் தங்கமயில், சும்மா எல்லோரும் பேசுங்க பேசுங்கன்னு சொன்னா அவங்க எப்படி பேசுவாங்க.
அரசியை அத்தை மற்றும் மாமா தலையில் அடித்து சத்தியம் பண்ண சொல்லுங்க என்று தங்கமயில் சொல்கிறார். உடனே அரசியும் பாண்டியில் தலையில் கை வைத்து உங்களை கஷ்டப்படுத்துற மாதிரி இனி நான் ஒரு விஷயம் கூட பண்ண மாட்டேன். அவர் கூட பேசவும் மாட்டேன் பழகவும் மாட்டேன் என்று சத்தியம் பண்ணுகிறார். உடனே கோமதி இடமும் சத்தியம் பண்ணுகிறார்.
அதற்கு கோமதி நீ படித்தது போதும் இனி வீட்டு வாசல் படியை கூட தாண்ட கூடாது என்று சொல்லிய நிலையில் அரசி எல்லாத்துக்கும் சரி என்று சம்மதம் கொடுத்து விடுகிறார். ஆனால் பாண்டியன் பேசாமல் அமைதியாக இருந்ததை பார்த்து அரசி மயக்கம் போட்டு கீழே விழுந்து விடுகிறார். பின்பு அரசியை எழுப்பி பாண்டியன் பேச ஆரம்பித்து விடுகிறார்.
அடுத்ததாக எல்லோரிடமும் இன்னிக்கு யாரும் வேலைக்கு போக வேண்டாம் வீட்டிலேயே இருங்க. நான் ஒரு இடத்துக்கு போயிட்டு வந்து விடுகிறேன் என்று சொல்லி பாண்டியன் கிளம்பி விடுகிறார். அந்த வகையில் ஏற்கனவே பாண்டியனின் அக்கா வீட்டுக்காரர் அரசியை பொண்ணு கேட்டு வந்திருந்தார். அதனால் அவரிடம் அரசின் கல்யாண விஷயத்தை பற்றி பேச போவார்.
ஆனால் தங்கமயில் சொன்ன சத்தியத்தை கொஞ்சம் கூட யோசிக்காமல் அரசி, கோமதி மற்றும் பாண்டியன் மீது சத்தியம் செய்து விட்டார். இதனால் குமரவேலுவை அரசி மறந்து விடக்கூடாது என்ற வயிற்றெரிச்சலில் சுகன்யா முழித்துக் கொண்டிருக்கிறார். அத்துடன் இன்னும் ஏதாவது தில்லாலங்கடி வேலைகளை பார்த்து குமரவேலுக்கு அரசியை கட்டி வைக்க வேண்டும் என்று சுகன்யா சதி பண்ணுவார்.