ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

மகன் கேட்ட ஒத்த கேள்வி, மருமகளிடம் தஞ்சமடைந்த பாண்டியன்.. மீனா ராஜியை பிரிக்க பிளான் பண்ணிய தங்கமயில்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிர் படித்துக் கொண்டே வேலை பார்த்து நம்மலையும் படிக்க வைக்கிறார் என்று ராஜி குற்ற உணர்ச்சியில் கவலைப்படுகிறார். அதனால் தன்னால் முடிந்த ஏதாவது ஒரு உதவியை கதிருக்கு பண்ண வேண்டும் என்று துடிக்கிறார். அதற்காகத்தான் டியூஷன் எடுப்பதற்கு முயற்சி எடுத்தார்.

ஆனால் அதை கெடுத்து விடும் விதமாக தங்கமயில் போட்ட பிளானில் பாண்டியன், ராஜி டியூஷன் எடுப்பதற்கு மறுத்துவிட்டார். இதனால் வேற வழி ஏதாவது இருக்குமா என்று ராஜி யோசித்த நிலையில், மீனா கொடுத்த ஐடியா தற்போது பாண்டியனை கோபப்படுத்தி விட்டது. அதாவது மீனா எனக்கு தெரிந்த வீட்டில் போயி நீ டியூஷன் எடுக்கிறியா என்று ராஜியிடம் கேட்டார்.

தங்கமயில் போடும் பிளான்

அதன்படி ராஜியும் டியூஷன் எடுக்க சம்மதம் கொடுத்திருந்தார். இதை கேள்விப்பட்ட பாண்டியன் வீட்டிற்கு வந்து வழக்கம் போல் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து ருத்ரதாண்டவம் ஆடுகிறார். இந்த மீனா சொல்லி அதை ராஜி கேட்டு வீடு வீடாக போயி டியூஷன் எடுக்கிறார். அப்படி என்றால் நான் சொன்னதற்கு இந்த வீட்டில் என்ன மரியாதை. இந்த பிள்ளை மீனா எப்பொழுது இங்கே வந்ததோ, அப்பொழுது யாரும் என் பேச்சு கேட்காமல் இஷ்டத்துக்கு முடிவெடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

எல்லாத்துக்கும் காரணம் இந்த மீனாதான் என்று பாண்டியன், மீனாவை அனைவரது முன்னிலையில் திட்டி விடுகிறார். இதனால் மீனா அழுது கொண்டே எதுவும் சொல்லாமல் போய்விட்டார். பிறகு மீனாவிற்கு சப்போர்ட் பண்ணும் விதமாக முதல்முறையாக செந்தில் வாயை திறக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் அப்பொழுது பாண்டியன் கோபத்தில் இருக்கும் பொழுது ஏதும் கேள்வி கேட்டால் இன்னும் பிரச்சினை அதிகமாகும் என்பதால் அமைதியாக விட்டார்.

அதன் பிறகு பாண்டியன் கடையில் இருக்கும் போது, செந்தில் அப்பாவிடம் நீங்கள் வரவர மீனாவை ரொம்ப தான் திட்டுறீங்க. எந்த பிரச்சனை என்றாலும் மீனாதான் காரணம் என்று சொல்கிறீர்கள். அப்படி மீனா என்னதான் உங்களுக்கு தவறு பண்ணினார் என்று கேள்வி கேட்கிறார். உடனே பாண்டியன் எப்படி பேசணும் யாரிடம் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும். நீ உன்னுடைய வேலையை போய் பாரு என்று கூறுகிறார். பிறகு பாண்டியன் மனதிலும் ஒரு குற்ற உணர்ச்சி வர ஆரம்பித்து விட்டது.

நம்ம பேசியது தவறு என்று தெரிந்த நிலையில் பாண்டியன் வீட்டிற்கு பலகாரங்கள் வாங்கிட்டு போகிறார். அப்பொழுது ராஜி மீனாவிடம், உங்களுக்காக மாமா என்ன வாங்கிட்டு வந்திருக்கிறான் என்று பாருங்கள் என பலகாரத்தை கொடுக்கிறார். அப்பொழுது கோபத்தில் இருந்த மீனவை பார்த்து என்னை உன்னுடைய அப்பாவா நினைச்சுக்கோ. நான் தவறாக பேசி இருந்தால் என்னை மன்னித்துவிடு என்று பாண்டியன் கூறுகிறார்.

நான் வாங்கிட்டு வந்த பலகாரத்தை நீ சாப்பிட மாட்டியா என்று மீனாவிடம் கேட்கிறார். அதற்கு மீனா, நமக்கு சோறு தான் முக்கியம் என்று சொல்வதற்கு ஏற்ப பாண்டியன் கொடுத்த பலகாரத்தை வாங்கிட்டு நான் எந்த கோபத்திலும் இல்லை. நீங்க வாங்கிய பலகாரத்தை நான் சாப்பிடுவேன் என்று சாப்பிட ஆரம்பித்து விட்டார். இதனை பார்த்து ஒட்டுமொத்த குடும்பமும் சந்தோஷமாகி விட்டார்கள்.

ஆனால் தங்கமயில் மட்டும் வயிற்றெரிச்சலில் கொந்தளிக்கிறார். இவர்கள் என்ன சண்டை போட்டாலும் அடுத்த நிமிஷமே ஒற்றுமையாகி விடுகிறார்களே என்று அம்மாவிடம் தங்கமயில் புலம்புகிறார். உடனே தங்கமயிலின் அம்மா, அவர்கள் ஒற்றுமையாக இருந்தால் நம் நிம்மதியாக இருக்க முடியாது. அதனால் ராஜி மீனாவை பிரிக்கும் வழியை பாரு என்று சகுனி வேலையை பார்க்க சொல்கிறார்.

அதன்படி தங்கமயில், ராஜி மீனாவிற்கு இடையில் விரிசல் விழும் அளவிற்கு கலகத்தை மூட்ட பிளான் பண்ணிவிட்டார். ஆனாலும் இவர்களிடம் தங்கமயில் ப்ளான் எதுவும் பலிக்காது.

பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த சம்பவங்கள்

Trending News