Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், நல்லா இருந்த பாண்டியன் குடும்பத்திற்குள் ஆமை மாதிரி புகுந்த சுகன்யா செய்த வேலைகளால் பாண்டியன் குடும்பமே தற்போது அல்லல் படப் போகிறது. அதாவது சந்தோசமாக சுற்றிக் கொண்டிருந்த பழனிவேலுவின் வாழ்க்கை மட்டும் சுகன்யாவால் வீணாகவில்லை. பாண்டியன் குடும்பமே மாட்டிக் கொண்டு முழிக்கிறது.
அந்த வகையில் குமரவேலு அரசியை காதலித்தது போல் நடித்து கல்யாணம் செய்த பிறகு பாண்டியன் குடும்பத்திற்கு கொடுக்கப்படும் பதிலடிதான் மிகப்பெரிய தண்டனையாக இருக்கப் போகிறது என்று சக்திவேல் மற்றும் குமரவேலு திட்டம் போட்டிருக்கிறார்கள். இந்தத் திட்டத்தை பற்றி தெரிந்து கொண்ட சுகன்யாவும், இவர்களுடன் கூட்டணி போட்டு அரசி வாழ்க்கையில் கும்மி அடித்து விட்டார்.
அந்த வகையில் அரசிடம் குமரவேலு பற்றி நல்ல விதமாக சொல்லி அரசி மனசில் காதலை விதைத்தது சுகன்யா தான். அதற்கு ஏற்ற மாதிரி அரசியும் குமரவேலுவை கண்மூடித்தனமாக நம்பி பைக்கில் ஊர் சுற்றுவது, ஹோட்டலுக்கு போய் சாப்பிடுவது, வீட்டில் இருந்து கொண்டே குமரவேலுவிடம் போன் பேசிக் கொண்டே இருப்பது போன்ற அனைத்து விஷயங்களையும் வீட்டுக்கு தெரியாமல் பண்ண ஆரம்பித்து விட்டார்.
ஆனாலும் அரசின் நடவடிக்கை மீது கோமதிக்கு சந்தேகம் வந்திருக்கிறது. அரசி அதையெல்லாம் பொய் சொல்லி சமாளித்துக் கொண்டே வருகிறார். தற்போது சுகன்யாவுடன் சேர்ந்து குமரவேலு கூட சினிமா பார்க்கலாம் என்று தியேட்டருக்கு கிளம்பி விட்டார். அதனால் வீட்டில் இருக்கும் பாண்டியன் மற்றும் கோமதியிடம் ஸ்பெஷல் கிளாஸ் என்று பொய் சொல்லி கிளம்புகிறார்.
இதனால் சந்தேகப்பட்ட கோமதி கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். அப்பொழுது பாண்டியன், அரசி மீது கொஞ்சம் கூட சந்தேகமே இல்லாமல் கோமதியை திட்டி விடுகிறார். அத்துடன் பசங்களுக்கு இவ்வளவு சுதந்திரம் கொடுக்காமல் கஞ்சத்தனமாக இருந்த பாண்டியன் அரசிக்கு மட்டும் கேட்டதும் பணத்தை தூக்கி கொடுத்து இஷ்டத்துக்கு விட்டு விட்டார். அதனால் தான் அரசியும் குடும்பத்தில் இருப்பவரிடம் பொய் சொல்லி சினிமாவிற்கு போய்விட்டார்.
அப்படி போன நிலையில் சுகன்யா அங்கிருந்து கழண்டு எஸ்கேப் ஆகிவிட்டார். பிறகு குமரவேலுவும் அரசியும் சினிமா பார்ப்பதற்கு முன் போட்டோ எடுத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அங்கே வேலை விஷயமாக சரவணன் வந்த நிலையில் ரெண்டு பேரையும் பார்த்து கோபப்படுகிறார். அந்த வகையில் அரசி குமரவேலு காதல் சரவணனுக்கு தெரிய வந்துவிட்டது.
சரவணனை பொறுத்த வரை எந்த விஷயத்தையும் பாண்டியனிடம் மறைக்க மாட்டார். அதனால் அரசியின் காதல் விஷயத்தையும் சரவணன் முதலில் பாண்டியனிடம் தான் சொல்லப் போகிறார். இதனால் பாண்டியன் மனம் உடைந்து கண்கலங்கி நிற்கப் போகிறார். சுகன்யாவின் திட்டத்தை கூடிய சீக்கிரத்தில் மீனா தெரிந்து கொள்வார். அத்துடன் பழனிவேலும் சுகன்யாவை விட்டு தனியாக இருந்தால் தான் நிம்மதியாக இருக்க முடியும்.