ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

Pandian Stores 2: தனத்துக்கே டஃப் கொடுக்கும் பாண்டியனின் மருமகள்.. ராஜ்ஜியை சமாதானப்படுத்திய கதிர்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், மீனா செந்திலுடன் சேர்ந்து சரவணன் கல்யாண பத்திரிக்கையை எடுத்துட்டு அப்பாவுக்கு கொடுக்கப் போகிறார். ஆனால் போகும்போதே கண்டிப்பாக ஏதாவது பிரச்சனையாகும். நம்மளை மதிக்க மாட்டார்கள் அவமானப்படுத்துவார்கள் என்று புலம்பிக் கொண்டுதான் மீனா போனார்.

அதே மாதிரி மீனாவை பார்த்ததும் ஜனார்த்தன் கோபத்தில் கொந்தளித்து வாய்க்கு வந்தபடி பேசி நீ என்னுடைய மகளை இல்லை. இப்பொழுது எந்த முகத்தைக் கொண்டு என் வீட்டிற்கு வந்து இருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு செந்தில் அண்ணனுக்கு கல்யாணம் அதற்குத் தான் பத்திரிக்கை கொடுக்க வந்திருக்கிறேன் மாமா என்று கூறினார்.

உடனே ஜனார்த்தன், அவளை என் மகள் இல்லை என்கிறேன். அப்படி இருக்கும் போது உனக்கு நான் எப்படி மாமாவா இருப்பேன் என்று தீட்டி விட்டு கதவை சாத்திவிட்டார். இந்த ஒரு விஷயத்தால் மீனா ரொம்பவே கவலையுடன் வீட்டிற்கு திரும்பி வந்தார்.

வந்ததும் பாண்டியன் மற்றும் கோமதி என்ன ஆச்சு மீனா என்று கேட்டதும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி எனக்கு இந்த மாதிரி ஒரு அசிங்கம் ஏற்பட்டு விட்டது. இதனால் தான் நான் அங்க போக மாட்டேன் என்று சொன்னேன். கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் கதவை சாத்தி விட்டார். நல்ல வேலை நீங்க போகவில்லை.

சரவணனின் மனைவியால் வரப்போகும் பிரச்சனை

இப்படி உங்களுக்கு ஏதாவது ஒரு அவமானம் ஏற்பட்டிருந்தால் குற்ற உணர்ச்சியால் நான் ரொம்பவே கஷ்டப்பட்டு இருப்பேன். நல்லவேளை நீங்கள் போகாமல் நான் போனேன் என்று ஒரு பொறுப்பான மருமகளாக பேசினார். அதுமட்டுமில்லாமல் மீனாவின் செயல்களும் பேச்சும் ஒரு நல்ல மருமகளாக இருக்கும் அங்கீகாரத்தை காட்டுகிறது.

இப்படித்தான் சீசன் 1 தொடரில் தனம் ஆணிவேராக குடும்ப பாரத்தை சுமந்து கொண்டார். தற்போது தனத்துக்கே டஃப் கொடுக்கும் விதமாக மீனா குடும்பத்தூணாக மாறிவிட்டார். இதற்கிடையில் கதிருக்கு ஏதாவது ஒரு சின்ன விஷயம் ஏற்பட்டால் ராஜி அவரை அறியாமல் துடிதுடித்துப் போய் விடுகிறார். அப்படித்தான் கதிருக்கு காலில் அடிபட்டவுடன் ராஜி பதறிப் போய்விட்டார்.

பிறகு ராஜி கவலைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக கதிர் ஏதோ சொல்லி சமாதானப்படுத்தி விட்டார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக மனம் ஒத்தும் தம்பதிகளாக மாறிக்கொண்டே வருகிறார்கள். இப்படி ஒற்றுமையாக இருக்கும் குடும்பத்திற்குள் ஆமை போல் தங்கமயிலின் குடும்பம் நுழைந்தால் என்ன கெதியாகப் போகிறதோ? பாவம் சரவணன் வேற கொஞ்சம் அமைதி. எல்லாரையும் ஆட்டிப்படைக்கும் வில்லியாக தங்கமயிலின் அம்மா அவதாரம் எடுக்கப் போகிறார்.

Trending News