Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியனின் குலசாமி கோவிலுக்கு பொங்கலை முன்னிட்டு ஒட்டுமொத்த குடும்பமும் போயிருக்கிறார்கள். அங்கே பொங்கல் வைத்து சம்மந்திகளுடன் ஒற்றுமையாக நாங்கள் இருக்கிறோம் என்று நிரூபித்து விட்டார். போதாதருக்கு கோபத்தில் இருந்த மீனாவின் அப்பா மற்றும் அம்மாவும் அதில் கலந்து கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டிகளும் நடைபெறப் போகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக கிரைண்டர் பரிசாக கொடுக்கப்படும் என்று அறிவிப்பு கொடுத்திருக்கிறார்கள். இதை கேள்விப்பட்டதும் கோமதி அந்த கிரைண்டருக்கு ஆசைப்பட்டு மகன்களையும் மருமகளையும் கூப்பிட்டு எப்படியாவது நீங்கள் எல்லா போட்டியிலும் ஜெயிக்க வேண்டும்.
நீங்கள் ஜெயித்தால் தான் நான் ஆசைப்பட்ட மாதிரி அந்த கிரைண்டர் கிடைக்கும். அதனால் எனக்காக நீங்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்று கண்டிஷன் போட்டு விட்டார். அதன்படி அரசி லெமன் ஸ்பூன், தங்கமயில் பலூன் டாஸ்க், ராஜி ஒரு கைப்பிடி தண்ணீர் கொண்டு வந்து பாட்டில் நிரப்ப வேண்டும். மீனா மியூசிக் சேரில் விளையாடுகிறார். இப்படி இவர்கள் விளையாடிய எல்லாவற்றிலும் ஜெயித்து விடுகிறார்கள்.
இவர்களைத் தொடர்ந்து பாண்டியனின் மகன்களும் ஒவ்வொரு விளையாட்டுகளிலும் ஜெயித்து விடுகிறார்கள். கடைசியில் பாண்டியன் குடும்பமா அல்லது அங்குள்ள குடும்பமா என்று கயிர் இழுக்கும் போட்டி நடைபெறுகிறது. இதிலையும் பாண்டியன் குடும்பம் வெற்றி பெற்று கோமதி ஆசைப்பட்டபடி முதல் பரிசு பெற்று கிரைண்டரை பெற்றுக்கொள்கிறார்கள்.
ஆனால் இதற்கு இடையில் ராஜி மற்றும் கதிரின், புரிதல் மற்றும் நெருக்கம் அதிகரித்து விட்டதே என்று சொல்லலாம். ஏற்கனவே ராஜி மீது கதிருக்கு காதலும் பாசமும் வந்துவிட்டது. அந்த வகையில் தற்போது ராஜியின் குடும்பம் இல்லாத நினைப்பை சரி செய்யும் விதமாக ராஜி பக்கத்திலேயே இருந்து கதிர் அரவணைப்புடன் பாசத்தை காட்டி ரொமான்ஸ் பண்ண ஆரம்பித்து விட்டார். ஏற்கனவே ராஜிக்கும் கதிர் மீது காதல் வந்துவிட்டது.
அதனால் தான் கதிரின் சின்ன வயசு போட்டோவை யாருக்கும் தெரியாமல் ராஜி எடுத்துக்கொண்டு ரசிக்கிறார். தற்போது கதிரும் முழுமையாக ராஜியை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு மனதார தயாராகி விட்டார். அந்த வகையில் ஒவ்வொரு நாளும் இவர்களுடைய ரொமான்ஸ் கூடிக்கொண்டே தான் வருகிறது.