அரசியை பொண்ணு பார்க்க வரும் பாண்டியனின் அக்கா.. மீனாவுக்கு அடுத்து தங்கமயிலை டேமேஜ் பண்ணிய சுகன்யா

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், நாளுக்கு நாள் சுகன்யாவின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பதற்கு ஏற்ப அடாவடி செய்து வருகிறார். அந்த வகையில் பழனிவேலுவின் கேரக்டரை டேமேஜ் பண்ணி குடும்பத்தில் இருப்பவர்கள் முன்னாடி அசிங்கப்படுத்திவிட்டார். இதனால் அவமானம் தாங்க முடியாத பழனி வீட்டுக்கு வர முடியாமல் இருக்கும் பட்சத்தில் சுகன்யாவின் சொந்தக்காரங்க வீட்டிற்கு வந்திருக்கிறார்கள்.

உடனே சுகன்யா, பழனிக்கு ஃபோன் பண்ணி கூப்பிடுகிறார். ஆனால் பழனி போன் எடுக்கவில்லை என்பதால் சுகன்யா தொடர்ந்து போன் அடித்து டார்ச்சர் பண்ணினார். ஒரு கட்டத்திற்கு பிறகு பழனி போன் எடுத்ததும் சுகன்யா திட்ட ஆரம்பித்து விடுகிறார். இதனால் பழனி போனை சுவிட்ச் ஆப் பண்ணி விடுகிறார். பிறகு தங்கமயில் ஹோட்டலில் வேலை பார்க்கும் பொழுது அதே ஹோட்டலுக்கு சாப்பிடுவதற்கு சக்திவேல் மற்றும் குமரவேல் வருகிறார்கள்.

அதனால் இவர்கள் கண்ணில் சிக்கக் கூடாது என்பதற்காக தங்கமயில் மறைவாக நின்று விடுகிறார். அவர்கள் போனதும் அந்த ஹோட்டல் ஓனர் தங்கமயிலிடம் உனக்கு சக்திவேலுவை தெரியுமா? அவர்களைப் பார்த்ததும் நீ ஏன் மறைந்தாய், நீ ஏதாவது தப்பு பண்ணி இருக்கியா என்று வித்தியாசமாக கேட்க ஆரம்பித்து விட்டார். உடனே தங்கமயில் அதெல்லாம் எதுவும் இல்லை, நான் இங்கே வேலை பார்ப்பது என்னுடைய குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரியாது.

அதனால்தான் தெரிஞ்சவங்க யாராவது வர்ற மாதிரி இருந்தால் மறைந்து கொள்வேன் என்று சொல்லி சமாளித்து விடுகிறார். பிறகு சரவணன், தங்கமயிலுக்கு போன் பண்ணி நாளைக்கு அரசியை பொண்ணு பார்க்க வருகிறார்கள். அதனால் நீ லீவு கேட்டுட்டு வீட்டுக்கு வா என்று சொல்லிவிடுகிறார். தங்கமயிலும் ஓனரிடம் கெஞ்சி லீவு கேட்டு வீட்டிற்கு வரும் பொழுது பஸ் ஸ்டாண்டில் பழனி நிற்பதை பார்த்து விடுகிறார்.

உடனே இரண்டு பேருமே பேசிவிட்டு பலனை வீட்டுக்கு தான் போகிறேன் வா உன்னை நான் கூட்டிட்டு போகிறேன் என்று பைக்கில் கூட்டிட்டு வருகிறார். அப்படி வீட்டுக்கு வந்ததும் சுகன்யா இவர்கள் ஒன்றாக வருவதை பார்த்து பழனியை தனியாக கூப்பிட்டு என்ன உங்க மயிலோட ஊரு சுத்திட்டு வரீங்களோ என்று மயிலையும் சேர்த்து வைத்து தவறாக பேசி விடுகிறார்.

இந்த சுகன்யாவின் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்பதற்கு ஏற்ப பழனிக்கு நிம்மதி இல்லாத ஒரு வாழ்க்கையை கொடுத்து தினம் தினம் டார்ச்சர் செய்து வருகிறார். இதிலிருந்து பழனி தப்பிக்க வேண்டும் என்றால் சுகன்யாவின் முகத்திரையை வெளியே கொண்டு வந்ததால் முடியும். அதனால் சுகன்யாவுக்கு அடங்கிப் போகாமல் அதிகாரம் பண்ண ஆரம்பித்தால் இன்னும் இந்த நாடகம் சுவாரஸ்யமாக இருக்கும்.

இதற்கிடையில் அரசியை பொண்ணு பார்க்க வரும் பொழுது அதில் ஏதாவது ஒரு குளறுபடியை பண்ணி குமரவேலுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று சுகன்யா பிளான் பண்ணுகிறார். சுகன்யாவை பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் நம்பியதால் கடைசியில் அரசி வாழ்க்கையில் ஏமாற்றுத்துடன் நிற்கப் போகிறார்கள்.

Leave a Comment

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்