ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

தியேட்டரில் 18 பேரை கண்டு கதறி அழுத பாண்டியராஜன்.. பின் ரஜினியால் வெற்றிகண்ட படம்

இயக்குனர் பாக்யராஜின் உதவி இயக்குனராக சினிமாவிற்குள் நுழைந்த பாண்டியராஜன் அவர்கள் சிறு சிறு வேடங்களில் பல படங்களில் தோன்றி சினிமாவை கற்றுக்கொண்டார். பாக்யராஜின் உதவி இயக்குனர் என்பதால் பாக்யராஜின் சாயல் அப்படியே இவரின் படத்தில் தெரியும். யதார்த்தமான திரைக்கதை எப்போதும் நகைச்சுவை கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்று பாக்யராஜின் அத்தனை பாணியும் பாண்டிராஜ் படங்களில் தெரியும்.

ஆனால் இவரது ஆரம்ப வாழ்க்கை அவ்வளவு எளிதாக இல்லை எப்பொழுதும் வறுமை பசி அதோடு சேர்த்து திரைத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவு என்று ஒட்டு மொத்தமாக முடங்கிப் போன ஒரு வாழ்க்கையைத் தான் ஆரம்ப காலத்தில் பாண்டியராஜன் அவர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார். இவர் எடுத்த பல படங்களில் மிக முக்கியமான சில படங்கள் மக்களின் மனதை இன்றளவும் வென்று வருகின்றன. அப்படி இவர் இயக்கி நடித்த ஆண்பாவம் படத்திற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

ஆண்பாவம் படத்தில் வரும் பாடல், நகைச்சுவை காட்சிகள், இசை என தமிழ் சினிமாவில் ஒரு புதிய ட்ரெண்ட் இங்கே உருவானது. 1985 ஆம் ஆண்டு வெளியான ஆண்பாவம் படம் வெளியான போது இயக்குனர் நடிகர் என ஊர், பேர் தெரியாத பாண்டியராஜின் முதல் படம் என்பதால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இந்த படம் வெளியானது. இந்த படத்தில் சின்னசாமி பெரியசாமி என்ற கதாபாத்திரங்களில் அண்ணனும் தம்பியும் ஆக பாண்டியன் மற்றும் பாண்டியராஜன் இருவரும் சேர்ந்து காமெடியில் கலக்கி இருப்பார்கள்.

எந்த ஒரு பெரிய நடிகரும் இந்த படத்தில் நடிக்காமல் வெளியான படம் என்பதால் திரையரங்குகளுக்கு கூட்டமே வரவில்லை. இதில் நடித்த பாண்டியராஜனையும், பாண்டியனையும், யாருக்கும் தெரியாது என்பதால் திரையரங்குகள் காலியாக இருந்தது. முதல் படம் என்பதால் திரையரங்கிற்கு சென்று பார்க்கலாம் என்று திரையரங்கிற்கு சென்று பாண்டியராஜன் பார்க்க சென்ற போது, தியேட்டரில் வெறும் 18 பேர் மட்டும் இருந்ததை கண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதிருக்கிறார் பாண்டியராஜன்.

ஆனால் பக்கத்து திரையரங்கில் ரஜினியின் படிக்காதவன் படம் ஓடிக் கொண்டிருந்தது. அந்த படம் மிகப்பெரிய ஹிட் மற்றும் தியேட்டரே ஹவுஸ்புல்லாக இருந்தது. அப்படி படிக்காதவன் படத்திற்கு வந்தவர்கள், ஹவுஸ் புல்லால் வேறு வழியில்லாமல் அங்கே டிக்கெட் கிடைக்காமல் இந்த படத்தில் வந்து உட்கார்ந்து இருக்கின்றனர். அப்படி வந்தவர்களும் இந்த படத்தை பார்த்துவிட்டு வயிறு குலுங்க சிரித்து விட்டுச் சென்றிருக்கின்றனர்.

அப்படி ரஜினியின் படத்திற்கு செல்லாமல் இங்கு வந்தவர்களின் மூலமாக படத்தின் புரமோஷன் வேலை ஆரம்பமானது, ரசிகர்களின் விமர்சனங்களால், அதன் பிறகு இந்த படத்தை பலரும் பார்க்க வந்து ஆண்பாவம் படம் தானாக ஹிட்டடித்தது. முன்னணி திரை கலைஞர்கள் படங்கள் வரிசைக்கட்டி வெளியாகி கொண்டு இருந்த நேரத்தில், இப்படி ஒரு படம் ஹிட் அடித்தது அந்த காலத்தில் சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது.

- Advertisement -spot_img

Trending News