புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

மீனாவிடம் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட மூர்த்தி.. 90’s கதையை இப்ப உருட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் இரண்டாவது தம்பி, கதிர் வீட்டை விட்டு வெளியேறி பல கஷ்டங்களுக்கு பிறகு ஹோட்டல் கடை ஆரம்பித்தார். முதல் வியாபாரத்தை முடித்த மூர்த்தி, கையோடு பார்சலையும் வாங்கி வந்து சாப்பிட்டு விட்டு வீட்டில் இரவு சாப்பாடு சாப்பிட முடியாமல் தவித்தார்.

இரவு உணவிற்கு பிறகு, கொள்ளைப்பக்கம் சென்ற மீனாவின் கண்களில் அந்த பார்சல் மாட்டி கொண்டது. சும்மாவே சின்ன பிரச்சனையை பெரிசாக்கும் மீனா, அந்த பார்சலை பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் தான் போட்டிருப்பார்கள் என்று நினைத்து வீட்டிற்குள் அந்த பார்சலை எடுத்து சென்று விட்டார்.

Also Read: டாப் 10 சீரியல் நடிகைகளின் மொத்த லிஸ்ட்.. முதலிடம் பிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்!

வீட்டிற்குள் சென்ற மீனா பக்கத்துக்கு வீட்டுக்காரரிடம் சண்டை போட்டே ஆக வேண்டும் என தயாராகிவிட்டார், அவருடன் ஐஸ்வர்யாவும் சேர்ந்து கொண்டார். மூர்த்தி செய்வதறியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தார்.

நடப்பதை ஓர் அளவுக்கு புரிந்து கொண்ட தனம், மூர்த்தி மாட்டிக்கொள்ள கூடாது என்பதற்காக தன்னால் முடிந்தவரை மீனாவையும், ஐஸ்வர்யாவையும் சமாளித்து அனுப்பி வைத்து விடுவார்.

Also Read: ஓசி சாப்பாட்டுக்கு ஓடோடி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. முட்டி மோதிக் கொள்ளும் மீனா, ஐஸ்வர்யா

இந்த நிலையில் ஏற்கனவே முல்லை அவர் அக்கா மல்லிகா செய்த பிரச்சனையால் மனமுடைந்து இருக்கும் போது முல்லையையும், கதிரையும் மீண்டும் மல்லிகா வம்புக்கு இழுக்க போகின்றார். மேலும் மூர்த்தி அறைக்கு வந்த பிறகு, தனம் இதை பற்றி மூர்த்தியிடம் கேள்வி கேட்டு கொண்டே இருப்பார், மூர்த்தி பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாகவே இருந்து விடுவார்.

காலையில் வழக்கம் போல் தனம், மீனா, ஐஸ்வர்யா சமையல் வேலைகள் செய்து கொண்டிருப்பார்கள், அப்போது மீனா தனத்தின் குழந்தையை வீட்டில் விட்டு செல்லும் படி கேட்கிறார். மீனாவும், ஐஸ்வர்யாவும் இரண்டு பாண்டியனையும் , கயலையும் எப்படி பார்த்து கொள்ள போகிறார்கள் என் என இனி தான் தெரியும்.

Also Read: சூரிய வம்சத்தை மிஞ்சிய பாண்டியன் ஸ்டோர்ஸ்.. சரத்குமாருக்கே டஃப் கொடுத்த மூர்த்தி

Trending News