திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

மீனா ராஜி பற்றி புரிந்து கொண்ட பாண்டியனின் மருமகள்.. அம்மாவின் சகவாசத்தை கட் பண்ண போகும் தங்கமயில்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயில் என்னதான் பொய்யும் பித்தலாட்டமும் செய்து பாண்டியன் வீட்டு மருமகளாக வந்திருந்தாலும் தற்போது வரை யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாமல் அந்த குடும்பத்தின் ஒருவராக இருக்க வேண்டும் என்று தான் பொறுப்பாக நடந்து கொள்கிறார். ஆனால் இதை கெடுக்கும் விதமாக அவ்வப்போது இவருடைய அம்மா போன் பண்ணி தங்கமயிலின் மனசை குழப்பி விடுகிறார்.

அந்த வகையில் தங்கமயில், தொடர்ந்து பாண்டியன் குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்க வேண்டும். கட்டின புருஷன் சரவணனுடன் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் அம்மாவின் சகவாசத்தை கட் பண்ணி விட்டால் தங்கமயில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அதாவது மாமனாருக்கு 50வது பிறந்தநாள் வருகிறது என்று தெரிந்ததும் தங்கமயில் ரொம்பவே சந்தோஷப்பட்டு ஏதாவது சர்ப்ரைஸ் ஆக பிறந்தநாளுக்கு பண்ணலாம் என்று யோசித்தார்.

கொஞ்சம் கொஞ்சமாக மனசு மாறும் தங்கமயில்

அதன்படி மீனா மற்றும் ராஜி கிட்டயும் அந்த ஐடியாவை சொல்லி மூணு பேரும் பொருட்களை வாங்க போய் விட்டார்கள். ஆனால் போவதற்கு முன் ராஜி மற்றும் மீனாவிடம் பணம் இருக்கிறது. நம்மிடம் இல்லை என்ற தயக்கத்துடனே போகிறார். இருந்தாலும் மாமனாருக்கு டிரஸ் மாமியாருக்கு புடவை என்று வாங்கும் பொழுது பெரிய பட்ஜெட்டாக வந்துவிட்டது.

இதற்கு தன்னால் முடிந்த பணத்தை கொடுக்கும் விதமாக ராஜி, மீனாவிடம் பணம் கொடுக்கிறார். ஆனால் மீனா அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி யாரிடமும் பணம் வேண்டாம் மொத்தத்தையும் பில் போட்டு வாங்கி கொள்கிறார். இந்த இடத்திலும் தங்கமயில் நம்மிடம் பணம் இல்லை என்ற ஒரு கலக்கத்துடனே மூஞ்சியை தொங்க போட்டு இருந்தார்.

பிறகு அனைவரும் சேர்ந்து ஹோட்டலில் சாப்பிடலாம் என்று பிளான் பண்ணி பிரியாணி, சிக்கன் என அனைத்தையும் ஆர்டர் பண்ணி சாப்பிட போகிறார்கள். அவர் தங்கமயில் நம்மிடம் பணம் இல்லை என்று பரிசை பார்க்கும் பொழுது பாண்டியன் கொடுத்து இருநூறு ரூபா மட்டும் இருக்கிறது என்று ஃபீல் பண்ணுகிறார். அதனால் சாப்பிட மனசு இல்லாமல் வீட்டுக்கு போகலாம் என்று கூப்பிடுகிறார்.

ஆனால் மீனா அதெல்லாம் இல்ல நல்லா சாப்பிட்டு போகலாம் என்று சொல்லி ஆர்டர் போட்டு விடுகிறார். பிறகு தங்கமயில், சரவணன் மாமாக்கு சாப்பாடு கொண்டு போகவில்லை என்று ஒரு காரணத்தை சொல்லி கிளம்புகிறார். உடனே ராஜி மற்றும் மீனா,சரவணன் மாமாவுக்கு போன் பண்ணி இன்னைக்கு வெளியில சாப்பிட சொல்லுங்க.

அவர் ஒண்ணும் கோவிச்சுக்க மாட்டார் என்று சொல்லி தங்கமயிலை கட்டாயப்படுத்தி சாப்பிட வைக்கிறார்கள். இப்பொழுதுதான் தங்கமயிலுக்கு படிப்பின் அருமையும் அதனுடைய மகத்துவம் எந்த அளவுக்கு கொடுக்கும் என்பதையும் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்து இருக்கிறது. அந்த வகையில் மீனா மற்றும் ராஜி, தங்கமயில் சூழ்நிலையை புரிந்து அவரிடம் பணம் கேட்காமல் நன்றாகவே சமாளித்து விடுகிறார்கள்.

அதனால் மீனா மற்றும் ராஜி எந்த மாதிரியான ஒரு கேரக்டர் என்பது தங்கமயிலுக்கு புரிந்திருக்க இது ஒரு வாய்ப்பாக அமையும். ஆனால் இதையும் கெடுக்கும் விதமாக பாக்கியம் உள்ளே நுழைந்து தங்கமயிலின் மனசை மாற்றி விட்டால் இப்ப இருக்கு ஒற்றுமை இல்லாமல் போய் விடும்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -

Trending News