வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

மோசமான அண்ணன்கள் இடமிருந்து தப்பித்த பாண்டியனின் மச்சான்.. ராஜிக்கு அக்மார்க் புருஷனாக மாறிய கதிர்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பழனிவேலு தன் வீட்டிற்கு வந்து விட்டால் பாண்டியன் மொத்தமாக அசிங்கப்பட்டு போய்விடுவார் என்ற எண்ணத்தில் தான் முத்துவேல், அம்மா மூலம் காய் நகர்த்தி தம்பியை வீட்டிற்கு வரவழைத்தார். இதனால் பாண்டியனும் மாமியாருக்காகவும் பழனிவேலுக்கு நல்லபடியாக கல்யாணம் பண்ண வேண்டும் என்ற எண்ணத்திலும் வீட்டை விட்டு வெளியே அனுப்பினார்.

உடனே பழனிவேலு, அண்ணன் வீட்டிற்கு போன நிலையில் அங்கு போய் நிம்மதி இல்லாமல் சந்தோஷத்தை இழந்து எதையோ பறி கொடுத்தது போல் பரிதவித்தார். அத்துடன் பாண்டியன் மச்சான் நம்மளை வீட்டை விட்டுவிட்டு அனுப்பியதற்கு காரணம் நம்ம அம்மா அவர்களிடம் கேட்டுக் கொண்டதால் தான். அதனால் தான் அம்மாவிற்காக நம்மளை அனுப்பி இருக்கிறார் என்று புரிந்து கொண்டார்.

இருந்தாலும் அண்ணன்களுக்காகவும் கொஞ்சம் இருக்கலாம் என்ற நினைப்பில் அந்த வீட்டில் இருந்த பழனிவேலுக்கு தொடர்ந்து சக்திவேல் மற்றும் முத்துவேலு, பாண்டியனை பற்றி தவறாக பேசிக் கொண்டு வந்தார்கள். இதனை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத பழனிவேலு நீயும் வேண்டாம், உன் பாசமும் வேண்டாம் என்று சொல்லி மோசமான அண்ணன்கள் வீட்டில் இருந்து பழையபடி பாண்டியன் விட்டுக்கு திரும்ப போய்விட்டார்.

இதற்கிடையில் பாண்டியன் வீட்டில் எந்தவித கவலையும் இல்லாமல் சகஜமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தது பழனிவேலுதான். அப்படிப்பட்டவர் இல்லை என்பதால் மொத்த குடும்பமும் எதையோ இழந்தது போல் கவலைப்பட ஆரம்பித்து விட்டார்கள். அதிலும் தன்னுடைய தம்பி சின்ன வயசிலிருந்து தன்கூடவே தானே இருந்துட்டு வந்தான். ஆனால் இப்பொழுது அவன் இல்லை என்றதும் ரொம்ப கவலையாக இருக்கிறது என்று கோமதியும் மன வருத்தப்பட ஆரம்பித்து விட்டார்.

அதனால் சாப்பிடாமல் இருந்தபொழுது பாண்டியன் வீட்டுக்கு வந்ததும் வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் கோமதி சாப்பாடு பரிமாறுகிறார். ஆனாலும் கோமதி முகத்தில் சிரிப்பே இல்லை என்று பாண்டியன் புரிந்து கொண்டு கொஞ்சம் மனசை மாற்றப் பார்க்கிறார். அந்த சமயத்தில் பழனிவேலு நான் வந்து விட்டேன் என்று சந்தோசத்துடன் எல்லாரையும் குதூகலப்படுத்தி விட்டார்.

அத்துடன் இனிமேல் நீங்க சொன்னாலும் நான் அந்த வீட்டுக்கு போக மாட்டேன் என்று பழையபடி சாப்பிட உட்கார்ந்து விட்டார். அப்பொழுது பாண்டியனும் எதுவும் சொல்லாமல் நல்லா சாப்பிடு என்று சொல்லிய பொழுது பழனிவேலு சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு போக சொல்ல மாட்டீங்களா என்று பாவமாக கேட்க ஆரம்பித்து விட்டார். உடனே பாண்டியன் அப்படியெல்லாம் நான் சொல்ல மாட்டேன் நீ எங்கேயும் போக வேண்டாம், இங்கேயே இருந்து கொள் என்று சொல்லிவிட்டார்.

இதனை தொடர்ந்து எப்படியும் பழனிவேலுக்கு ஒரு நல்ல பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பேன் என்று பாண்டியன் மறுபடியும் பழனிவேலுவின் கல்யாண பேச்சை ஆரம்பித்து விட்டார். உடனே பழனிவேலு எனக்கு கல்யாணம் வேண்டாம் எந்த பிரச்சனையும் வேண்டாம் என்று சொல்லி பாண்டியனிடம் சொல்கிறார். அதற்கு பாண்டியன் உன்னை அப்படி எல்லாம் விட்டு விடமாட்டேன் நிச்சயம் உனக்கு நல்ல பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பேன் என்று வாக்கு கொடுத்து விட்டார்.

அடுத்ததாக ராஜியின் கனவை நினைவாக வேண்டும் என்பதால் கதிர் தொடர்ந்து ராஜியை கூட்டிட்டு ட்ரெயினிங் கொடுத்து வருகிறார். அந்த வகையில் ராஜி மைதானத்தில் ஓடும் பிராக்டிஸ் எடுக்கும் பொழுது பாண்டியன் பார்த்து விடுகிறார். பிறகு விஷயத்தை கேள்விப்பட்ட பாண்டியன் வீட்டிற்கு வந்ததும் ராஜியிடம் நீ ஒன்னும் போலீஸ் ஆக வேண்டாம் ஒழுங்கா படிக்கிற வேலையை பாரு என்று சொல்கிறார்.

அதற்கு கதிர் நிச்சயம் ராஜியை நான் அவள் ஆசைப்பட்ட மாதிரி போலீசாக்குவேன் என்று துணிச்சலாக பேசுகிறார். உடனே கோவப்பட்ட பாண்டியன் அப்படி என்றால் இந்த வீட்டில் இருக்க வேண்டாம் என்று சொல்லிய பொழுது கதிர் சரி என்று சொல்லி ராஜியை கூட்டிட்டு வெளியே கிளம்ப பார்த்தார். பிறகு கோமதி சமாதானப்படுத்திய நிலையில் உங்கள் வலுக்கட்டாயத்தின் படி ராஜியை நான் கல்யாணம் பண்ணிக் கொண்டேன்.

ஆனால் இப்பொழுது அதே மாதிரி நீங்கள் அவள் போலீசாக வேண்டாம் என்று சொன்னாலும் அதை கேட்க வேண்டுமா? அப்படி எல்லாம் என்னால் இருக்க முடியாது ராஜி ஆசைப்பட்ட மாதிரி போலீஸ் ஆக்கி காட்டுவேன். அதற்கு நான் எப்பொழுதுமே ராஜி கூட பக்கபலமாக இருப்பேன் என்று ஒரிஜினல் அக்மார்க் புருஷனாக கதிர், ராஜி மீது மொத்த அன்பையும் காட்டிவிட்டார்.

Trending News