புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பாண்டியனுக்கு வரும் பிரச்சனை, ஐடியா கொடுத்த சம்மந்தி.. தங்கமயிலை ஓரமாக உட்கார வைத்த மீனா

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கோமதியிடம் மாமியார் என்ற கெத்துடன் தங்கமயில் இடம் அதிகாரம் பண்ணுங்கள். அப்பொழுதுதான் கொஞ்சம் அடங்குவார் என்று மீனா மற்றும் ராஜி கூட்டணி சேர்ந்து கோமதிக்கு தைரியத்தை கொடுக்கிறார்கள். அதன்படி கோமதி, தங்கமயிலை கடைக்கு சாப்பாடு எடுத்துட்டு போக வேண்டாம் என்று சொல்கிறார்.

ஆனால் தங்கமயில், பாண்டியன் கொடுத்த சப்போர்ட்டின் படி கோமதி பேச்சை கேட்காமல் சாப்பாடு எடுத்துட்டு போய் விடுகிறார். பிறகு சாப்பாடு கொடுத்துட்டு தங்கமயில் நேரடியாக இவருடைய அம்மா வீட்டிற்கு போகிறார். போனதும் பாக்கியம் தங்கமயிலிடம் நலம் விசாரிக்கிறார். அப்பொழுது ஹனிமூன் நீங்கள் எங்கேயும் போகவில்லையா. இதைப்பற்றி மாப்பிள்ளையிடம் பேசி அவரை தனியாக கூட்டிட்டு போய் சந்தோசமாக இருங்கள் என்று சொல்கிறார்.

தங்கமயிலுக்கு சரியான பதிலடிப்படுத்த மீனா

அதற்கு தங்கமயில், நீ வேற நான் எப்பொழுது என்னை பற்றி தெரியும், கவரிங் நகை வெளிச்சத்துக்கு வந்து விடுமோ என்ற பயத்தில் ஒவ்வொரு நாளும் இருந்து வருகிறேன் என்று சொல்கிறார். அதற்கு பாக்கியம் எவ்வளவோ பண்ணிட்டோம் இதை சமாளிக்க முடியாதா பார்த்துக்கலாம் என்று தங்கமயிலுக்கு ஆறுதல் சொல்கிறார். அப்பொழுது தங்கமயில், மாமாவை தவிர மற்ற அனைவரும் என்னிடம் சரியாக பேசவில்லை.

அதிலும் என் மாமியார் கோமதியுடன், மீனா ராஜி கூட்டணி சேர்ந்து கொண்டு என்னை தனியாக ஒதுக்குகிறார்கள் என்று புலம்புகிறார். இதை கேட்ட பாக்கியம் அப்படி என்றால் அவர்களுக்குள் ஏதாவது பிரச்சினை வருகிற மாதிரி நீ ஏதாவது கலகத்தை மூட்டிவிடு என்று சொல்கிறார். பிறகு மாமியார் கோமதி உன் பக்கம் இழுத்து விடு. அதன் பிறகு அனைவரும் உனக்கு அடிமையாகி விடுவார்கள் என்று ஐடியா கொடுக்கிறார்.

அதன் படி தங்கமயில் நகர்த்தப் போகும் ஒவ்வொரு காயும் குடும்பத்தில் இருப்பவர்களின் ஒற்றுமையை கலைக்கவும் பாண்டியனுக்கு பிரச்சினையை கொடுக்கும் விதமாக தங்கமயிலின் ஆட்டம் இருக்கப் போகிறது. இன்னொரு பக்கம் இவர் என்னதான் பிளான் போட்டாலும் மீனா ராஜி இருக்கும் வரை பெருசாக எந்த பிரச்சினையும் வராது என்பது போல் வலுவாக இருக்கப்போகிறது.

இதனைத் தொடர்ந்து மீனா ஆபீஸ் வேலை முடித்துவிட்டு வரும்போது வீட்டுக்கு தேவையான பண்டங்கள் வாங்கிட்டு வருகிறார். அதை அரசி, ராஜி, கோமதி அனைவரும் சாப்பிடும் பொழுது தங்கமயில் வந்து இது ஆரோக்கிய உணவு கிடையாது. இதற்கு ஏன் இவ்வளவு செலவு பண்ண வேண்டும். இதை கொஞ்சம் சேர்த்து வைத்தால் ஒரு இடத்தை வாங்கலாம் என்று அட்வைஸ் கொடுக்கிறார்.

உடனே மீனா அப்படி என்றால் நீங்கள் இதுவரை எத்தனை இடம் அப்படி வாங்கி சேர்த்து வைத்திருக்கிறீர்கள் என்று தங்கமயிலை நக்கல் அடிக்கும் விதமாக ஒரு கேள்வி கேட்டு வாயை மூட வைத்து விட்டார். இதனால் தொடர்ந்து எதுவும் பேச முடியாத தங்கமயில் வாயை மூடிக்கொண்டு உள்ளே போய்விடுகிறார். அந்த வகையில் இந்த தங்கமயிலுக்கு சரியான ஆளு மீனாவாகத்தான் இருக்கும்.

இப்படி தொடர்ந்து மீனாவிடம் நோஸ்கட் வாங்கி இருக்கும் இடம் தெரியாமல் ஓரமாக ஒதுங்கி போய் நிற்கும் நிலமை தங்கமயிலுக்கு வரப்போகிறது. ஆனால் அதை கெடுக்கும் விதமாக பாண்டியன் உள்ளே நுழைந்து, வீட்டு நிர்வாகப் பொறுப்பை தங்கமயிலிடம் இடம் கொடுத்து விட்டால் அவர் தலையிலே அவரே மண்ண வாரி போட்ட மாதிரி எல்லாம் குட்டிச்சுவராக போய்விடும்.

பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த முந்தைய சம்பவங்கள்

Trending News