ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

மீனா ராஜியை புரிந்து கொள்ளாமல் அராஜகம் பண்ணும் பாண்டியன் குடும்பம்.. டார்ச்சர் கொடுக்க போகும் தங்கமயில்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், என்னமோ ராஜி செய்யக்கூடாத தவறை செய்ததாகவும், அனைவரையும் ஏமாற்றியதாகவும் நினைத்து ஒட்டுமொத்த குடும்பமாக சேர்ந்து ராஜியை திட்டி விட்டார்கள். அதிலும் ராஜிக்காக சப்போர்ட் பண்ணும் விதமாக கதிர் இருப்பார் என்று நினைத்தால் அவரும் அப்பாவுடைய கௌரவம் குடும்பத்துடைய மானம் என்று சொல்லி ராஜியை திட்டி விட்டார்.

இப்படி ஒவ்வொருவரும் ராஜியை குறை சொல்லும் பொழுது இதை பார்த்துட்டு என்னால் சும்மா இருக்க முடியாது என்ற ஆவேசமாக பொங்கி எழுந்த மீனா அனைத்து உண்மைகளையும் புட்டு புட்டு வைத்து விட்டார். அந்த வகையில் ராஜிக்கு எல்லா உதவியும் நான்தான் பண்ணினேன். அவள் செய்தது தவறு என்றால் அதற்கு முக்கிய காரணம் நானும் தான் என்று அனைவரும் முன்னாடியும் தில்லாக சொல்லி ராஜியை காப்பாற்ற நினைத்தார்.

பாண்டியன் கொட்டத்தை அடக்க சரியான ஆளு தங்கமயில் தான்

இதைக் கேட்டு பாண்டியன் குடும்பம் சும்மா இருக்குமா உடனே ராஜி கெட்டுப் போவதற்கு நீதான் காரணம் என்று மீனாவை குறை சொல்லி விட்டார்கள். ஏன் எல்லோரிடமும் மறைத்துக் கொண்டு டியூஷன் எடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்துச்சு என்று பாண்டியன் கேட்கிறார். அதற்கு கதிருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான ராஜி இதை பண்ணினால் என்று மீனா கூறுகிறார்.

அப்பொழுது பாண்டியன், அதை ஏன் எங்களிடம் மறைக்க வேண்டும் என்று கேட்கிறார். உங்களிடம் முதலில் வந்து சொன்னாள், ஆனால் நீங்கள் யாருமே அவளுக்கு சப்போர்ட் பண்ணவில்லை. அதற்கு பதிலாக டியூஷன் எடுக்க கூடாது என்று மறுப்பு தெரிவித்து விட்டீர்கள். அதனால் பாவம் அவளுக்கு வேற வழி இல்லை அதனால் தான் உண்மையை மறைத்து விட்டாள்.

இது ஒரு பெரிய குற்றம் இல்லையே என்று மீனா சொல்ல, உடனே செந்தில் அப்பாவுக்காக மீனாவை திட்ட அங்க பெரிய கூத்தாகவே நடந்து முடிந்து விட்டது. பிறகு செந்தில், பாண்டியனை கூட்டிட்டு கடைக்குப் போகும் வழியில் அப்பாவின் முகம் வாடி இருப்பதால் அவரை சமாதானப்படுத்த வேண்டும் என்று ஒரு டீக்கடையில் நிப்பாட்டி டீ வாங்கிக் கொடுத்து ஐஸ் வைத்து பேசுகிறார்.

அங்கே வந்த கதிர், எல்லாத்துக்கும் காரணம் நான் தான். என்னை மன்னித்து விடுங்கள் என்று அப்பாவிடம் உருகி உருகி பேச, உடனே பாண்டியனும் கதிர் மேலே கையை போட்டு அப்பா பாசத்தைக் காட்டி மொத்த காட்சியும் அப்பா பிள்ளை உறவை தூக்கி நிறுத்தி விட்டது. இது போதாது என்று நம்ம அத்தை தான நம்ம பேசினால் சரியாகிவிடும் என்று நினைத்து மீனா ராஜி கோமதியை பார்த்து பேச போகிறார்.

ஆனால் போன இடத்தில் கோமதியும், வாய்க்கு வந்தபடி மீனா ராஜியை திட்டிவிட்டு பண்ணுனது தப்பு என்று சண்டை போட்டுவிட்டார். போங்க இவங்களுக்கு ஒரு வேலையே இல்லை என்று மீனா மாடியில் தன்னந்தனியாக நின்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கே வந்த ராஜி, மீனாவிடம் மன்னிப்பு கேட்டு எல்லா பிரச்சனையும் என்னாலதான வந்தது. மன்னிச்சிடுங்க அக்கா என்று ராஜி மற்றும் மீனாவின் பந்தங்கள் வலுவாக ஆரம்பித்துவிட்டது.

இதை பார்க்கும் பொழுது ஒவ்வொரு வீட்டிலும் இந்த மாதிரி வாக்கப்பட்டு போன இரண்டு பேரும் ஒற்றுமையாகவும் விட்டுக் கொடுக்காமலும் இருந்தால் எவ்வளவு பெரிய சந்தோசம் என்பது புரிய வைக்கிறது. அந்த வகையில் மீனா மற்றும் ராஜியை புரிந்து கொள்ளாமல் ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து அராஜகம் செய்வதை பார்க்கும் பொழுது பாண்டியனுக்கு இந்த தங்கமயில் குடும்பம் தான் சரியான பாடத்தை கற்றுக் கொடுக்கும் என்பது தெரிகிறது.

அத்துடன் நகை விசயத்தில் ஏமாந்து மட்டும் இல்லாமல் படிப்பறிவு இல்லாத தங்கமயிலை மருமகளாக ஏற்று தான் கொண்டு வந்தவள் தான் சரியானவள் என்பது போல் ஓவராக அலட்டிக் கொள்ளும் பாண்டியனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பாக்கியம் மற்றும் தங்கமயில் சேர்ந்து ஆப்பு வைக்கப் போகிறார்கள். அப்பொழுதுதான் புரியப்போகிறது மீனா மற்றும் ராஜியின் அருமை.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News