புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கோமதி அராஜகம் பண்ணியதால் கொந்தளிக்கும் பாண்டியன்.. கதிரை உசுப்பேத்தி வேடிக்கை பார்க்கும் செந்தில்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ஒற்றுமையாக இருக்கும் மகன்களுக்கு இடையே பிரச்சனை வந்து தனியாக போய் விடுவார்களோ என்ற பயத்தில் கோமதி அதிரடியாக ஒரு முடிவு எடுக்கப் போகிறார். அந்த வகையில் இனி பாகுபாடு பண்ணி பிள்ளைகளை பார்க்கக்கூடாது என்று பாண்டியனுக்கு புரிய வைக்கும் விதமாக கடைக்கு ஆவேசமாக போகிறார்.

கடைக்கு போன பொழுது செந்தில் மற்றும் பழனிச்சாமி என அனைவரும் இருந்த நிலையில் சும்மாதான் கடைக்கு வந்தேன் என்று பேசி சமாளிக்கிறார். பிறகு செந்தில் பழனிச்சாமி, டீ குடிப்பதற்காக வெளியே போகிறார்கள். அப்பொழுது பாண்டியன், கோமதி இடம் நீ சும்மா கடைக்கு வர மாட்டாய். என்னாச்சு ஏதாவது பேசணுமா என்று கேட்கிறார்.

பசங்களுக்காக பாண்டியனிடம் கொந்தளித்த கோமதி

அதற்கு ஆரம்பத்தில் நாசுக்கா பக்கத்து வீட்டில் நடக்கும் பிரச்சனையும் பிள்ளைகள் ஒவ்வொருவரும் அடித்துக் கொண்டு தனித்தனியாக போகிறார்கள். இதனால் அவருடைய அம்மா அப்பா நிம்மதி இல்லாமல் தவிப்பதாக கோமதி ஒரு உதாரணத்துடன் தொடங்குகிறார். இதை எதற்கு என்னிடம் வந்து சொல்கிறாய் என்று பாண்டியன் கேட்ட நிலையில், நீங்க பண்றத பாத்தா நம்ம வீட்டிலும் இதே மாதிரி பிரச்சினை வந்து விடுமோ என்ற பயம் எனக்கு வர ஆரம்பித்து விட்டது.

மூன்று பிள்ளைகளையும் ஒன்னு போல பார்த்து பழக வேண்டும். அதுதான் நல்ல அப்பாக்கு அழகு. ஆனால் நீங்க சரவணன் மட்டும் தூக்கி வச்சு பேசி மத்த பிள்ளைகளை அவமானப்படுத்துகிறீர்கள். ஆனால் தற்போது வீட்டுக்கு வந்த மருமகள் முன்னாடி அதே மாதிரி நடந்தால் அவர்களுக்கு கோபம் வர தான் செய்யும். ஏதோ செந்தில் மற்றும் கதிராக இருக்கப் போய் கண்டுக்காமல் இருக்கிறார்கள்.

அதனால் தொடர்ந்து நீங்களும் அதே தப்பை பண்ண கூடாது என்று தாறுமாறாக பாண்டியனை பார்த்து கேள்வி கேட்கிறார். நான் அப்படி என்ன பண்ணிட்டேன் என்று பாண்டியன் கேட்டநிலையில், சரவணனை மட்டும் ஹனிமூன்க்கு அனுப்பி வைப்பது சரியா? மற்ற இரண்டு பிள்ளைகள் உங்களுக்கு என்ன வேண்டாத பிள்ளைகளா? ஏதோ அவங்களுக்கு பிடித்த வாழ்க்கையை மனைவியை தேர்ந்தெடுத்து கல்யாணம் பண்ணிட்டாங்க.

இதைத்தவிர வேற என்ன தவறு பண்ணிட்டாங்க என் பிள்ளைகள். செந்தில் மனசுக்குள் நிறைய விஷயத்தை வைத்து உங்களிடம் எதுவும் சொல்ல முடியாமல் தவித்து வருகிறான். இப்படியே போச்சுன்னா ஒரு நாள் இது பூகம்பமாக வெடித்து குடும்பமே இரண்டாக போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த அளவிற்கு போக நான் விட மாட்டேன். அதனால் தான் சொல்கிறேன் இனி மூன்று பிள்ளைகளையும் ஒன்று போல பார்க்க வேண்டும்.

அந்த வகையில் இவர்கள் மூன்று பேரையும் பொண்டாட்டியுடன் சேர்ந்து ஹனிமூன் அனுப்பி வைக்க வேண்டும் என்று கோமதி பாண்டியனுக்கு புரியும் வகையில் அனைத்து விஷயங்களையும் கூறிவிட்டார். இதை வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த செந்தில், கதிரை தனியாக சந்தித்து அப்பாவிடம் அம்மா வந்து பேசினதை சொல்கிறார். அந்த வகையில் செந்திலுக்கும் மீனாவை கூட்டிட்டு ஹனிமூன் போக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

அதனால் தான் கோமதி பேசிய போது எதையும் சொல்லாமல் தனியாக நின்று வேடிக்கை பார்த்திருக்கிறார். பின்பு நடந்த விஷயத்தை கதிரிடம் சொல்லிய நிலையில் கதிருக்கும் போக வேண்டும் என்று ஆசையை செந்தில் தூண்டி விடுகிறார். எது எப்படியோ தங்கமயில் மட்டும் தனியாக போயிட்டு வர வேண்டும் என்று பாக்கியம் போட்ட பிளானை உடைத்து மூன்று பிள்ளைகளுக்கும் ஒரு சந்தோஷத்தை கொடுக்கும் வழியில் நல்ல காரியத்தை பண்ணிவிட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News