Pandian Stores Serial 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாக்கியம் பொய்ப் பித்தலாட்டம் பண்ணி தங்கமயிலை பாண்டியன் குடும்பத்தில் மருமகளாக தள்ளிவிட்டார். சரி பணம் வசதி இல்லை என்றாலும், நல்ல குணத்துடன் இருந்தால் ஆவது தங்கமயிலின் கேரக்டர் அந்த குடும்பத்திற்கு ஒத்துப்போகிற மாதிரியாக இருக்கும். ஆனால் மகள் ஒழுங்காக இருந்தாலும் பாக்கியம் செய்த அலப்பறையால் தங்கமயில் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் போல.
அதாவது சரவணனுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று மூன்று நாள் ஹனிமூன்க்கு தங்கமயில் பிளான் பண்ணி போனார். அதற்கு ஏற்ற மாதிரி போன இடத்தில் சின்ன சின்ன சங்கடங்கள் ஏற்பட்டாலும் அதை எல்லாம் தாண்டி அண்ணனின் சந்தோஷத்திற்காக செந்தில் மற்றும் கதிர் பணத்தை ஏற்பாடு பண்ணி நல்ல ஹோட்டலில் தங்க வைத்து விட்டார்கள். ஆனால் இதை கெடுக்கும் விதமாக பாக்கியத்தின் சதியை கேட்டு தங்கமயில் மாறிவிட்டார்.
கோமதியை வெட்கப்பட வைத்த பாண்டியன்
அந்த வகையில் சரவணனுடன் சிரித்துப் பேசி சந்தோஷமாக இருந்த தங்கமயில், அம்மா பேச்சைக் கேட்டு கோபத்துடன் இருக்கும் மாதிரி மூஞ்சியை தூக்கி வைத்து சரவணன் உடன் பேசாமல் போய்விட்டார். இதை எப்படி டீல் பண்ணுவது என்று தெரியாத சரவணன், செந்திலுக்கு போன் பண்ணி ஐடியா கேட்கிறார். செந்தில் இதுதான் பொண்ணுங்களை புரிந்து கொள்ள முடியாது. அதனால் அவர்களாக வந்து பேசும் வரை நீ எதுவும் கண்டுக்காத பேசாம போய் தூங்கு என்று சொல்கிறார்.
அதன்படி சரவணன் தூங்கி விடுகிறார். இதை பார்த்து கடுப்பான தங்கமயில் பிரச்சனை பண்ணும் விதமாக சரவணனை நிம்மதி இல்லாமல் ஆட்டி படைக்கப் போகிறார். இதற்கிடையில் தங்கமயில், சரவணன் உடன் இருந்து எடுத்துகிட்ட புகைப்படங்களை பாண்டியனுக்கு அனுப்பி வைத்தார். அதைப் பார்த்த பாண்டியன் ஆகா ஓகோ என்று புகழ்ந்து மருமகளுக்கு ஜால்ரா போடும் விதமாக வாய்ஸ் மெசேஜில் சூப்பர் என்று அனுப்பி வைத்திருக்கிறார்.
இதை பார்த்து கடுப்பான கோமதி, வழக்கம் போல் புலம்பி கொண்டு அடுப்பங்கரையில் வேலை பார்க்கிறார். அந்த நேரத்தில் அங்கே போனா பாண்டியன், தங்கமயில் இடம் பேசினியா, போட்டோ எல்லாம் சூப்பர் என்று மெசேஜ் அனுப்பினியா என கேட்கிறார். அதற்கு கோமதி நான் கூட தான் பிள்ளையார்பட்டி கோயிலுக்கு போயிட்டு வந்து போட்டோ எல்லாம் அனுப்பி வைத்தேன்.
அத பத்தி ஏதாவது சொன்னீங்களா, நான் வெறும் இந்த வீட்டில் மிதியடி மாறி தான் இருக்கிறேன் என்று ஆதங்கத்தை கொட்டுகிறார். இதை பார்த்த பாண்டியன், தெரியாம கேட்டுப்புட்டேன் என்னை ஆளை விடு என்று கையெடுத்து கும்பிட்டு கிளம்பி விடுகிறார். பிறகு வெளியே நின்று கொண்டிருந்த பழனிச்சாமி இடம் வீடியோ கால் எப்படி பண்ணனும் என்று கேட்டு கோமதிக்கு வீடியோ கால் பண்ணுகிறார்.
அதை எடுத்து பேசிய கோமதி, பாண்டியனை பார்த்து பயந்து விட்டார். அந்த அளவிற்கு பாண்டியன் வீடியோ காலில் முகத்தை கிட்ட வைத்து கோமதியிடம் பேசினார். அப்பொழுது பாண்டியன் என்னமோ தெரியல மத்ததனால விட இன்னைக்கு பார்க்கும்போது நீ அந்த அளவுக்கு அம்புட்டு அழகா இருக்கிறாய் என்று வர்ணித்து பேசுகிறார். இதைக் கேட்டதும் வெட்கத்தில் கோமதி முகம் சிவந்து சந்தோசப்பட ஆரம்பித்து விட்டார்.
அப்பொழுது அங்கே வந்த ராஜி மற்றும் மீனா, மாமியாரை கலாய்க்கும் விதமாக என்ன அத்தை ஒரு ரொமான்ஸ் போயிட்டு இருக்கிறது என்று கேட்க கோமதி வெட்கப்பட்டு அசடு வழிய ஆரம்பித்து விட்டார். இப்படி இவர்களை வைத்து இந்த நாடகம் ஓடிக்கொண்டு வரும் வரை மக்களிடம் மிகப்பெரிய நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த தங்கமயில் வந்து ஓவராக ஆட்டம் ஆடிய பிறகு பார்க்கவே கடுப்பாக இருக்கிறது என்று மக்கள் நெகட்டிவ் விமர்சனங்கள் கொடுத்து வருகிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்
- தங்கமயிலிடமிருந்து சரவணனை காப்பாற்றிய செந்தில்
- Pandian Stores 2: பாண்டியன் அலட்சியத்தால் கேள்விக்குறியாகும் மீனாவின் வாழ்க்கை
- ராஜி மூலமாக பாண்டியனுக்கு ஏற்படப் போகும் அவமானம்