திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சர்ச்சையில் சிக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள் ராஜி.. பதிலடி கொடுக்க ஷாலினி போட்ட பதிவு

Vijay tv Serial: சின்னத்திரை சீரியல்கள் பொருத்தவரை சன் டிவி மற்றும் விஜய் டிவி தான் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் விஜய் டிவியில் எந்த சீரியல்களில் யார் நடித்தாலும் அவர்கள் மக்களிடம் அதிக அளவில் பேமஸ் ஆகிவிடுவார்கள். அந்த அளவிற்கு விஜய் டிவி ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் அளவிற்கு ஆர்டிஸ்டிகளின் கேரியரில் ஒரு மைல் ஸ்டோனாக இருக்கிறது.

அப்படித்தான் விஜய் டிவியில் கதாநாயகி சோ மூலம் அறிமுகம் ஆகிய ஷாலினி சின்னத்திரையில் நடிக்கும் பொருட்டாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் ராஜி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். எப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் 1 சீரியலில் முல்லை மற்றும் கதிர் கதாபாத்திரம் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றதோ, அதே மாதிரி தற்பொழுது ராஜி மற்றும் கதிரின் காம்போ மக்களை கவர்ந்திருக்கிறது.

raji tweet
raji tweet

இவர்களுடைய நடிப்பும் கெமிஸ்ட்ரி நல்லாவே ஒர்க் ஆகியதால் இவர்களுடைய காட்சிகளை அதிகமாக காட்டி முக்கியத்துவம் கொடுங்கள் என்று மக்கள் தொடர்ந்து கமெண்ட் பண்ணி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் ராஜி பற்றி வந்த சர்ச்சை என்னவென்றால் சில காரணங்களால் ஷாலினி இந்த கேரக்டரை விட்டு வெளியேறப் போவதாகவும் நாடகத்தில் இனி நடிக்க மாட்டார் என்றும் தகவல் வெளிவந்தது.

ஆனால் தற்போது இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஷாலினி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட பதிலடி என்னவென்றால் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் இருந்து விலகுவதாக வதந்திகள் சமூக வலைதளங்களில் வெளியாயிருக்கிறது. ஆனால் அது முற்றிலும் உண்மையானது இல்லை. நான் தொடர்ந்து ராஜி கதாபாத்திரில் உங்களுக்கு பிடித்த மாதிரி நடிப்பை கொடுத்து வருவேன் என்று ரசிகர்களுக்கு பதில் கொடுத்து இருக்கிறார்.

அந்த வகையில் இனி ஷாலினி தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடித்து ராஜியின் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அவர்களுக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இனிவரும் எபிசோடுகளில் கதிர் மற்றும் ராஜியின் கதாபாத்திரங்கள் ஹைலைட்டாக அமையப் போகிறது.

Trending News