புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மாமியாருக்காக மனசு இறங்கிய பாண்டியன்.. குமரவேலுவின் கல்யாணத்தில் ஏற்பட போகும் அசம்பாவிதம்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் என்னதான் கரராக இருந்தாலும் பிள்ளைகளை எப்படி கட்டுக்கோப்பாக வளர்க்கணும் என்ற விஷயத்தில் அப்பாவின் கடமையை சரிவர செய்திருக்கிறார். அதே மாதிரி கோபக்காரராக இருந்தாலும் மாமியாருக்கு ஒரு பிரச்சினை என்றதும் கோபத்தை விட பாசம் தான் ஒசந்தது என்பதையும் காட்டிவிட்டார்.

அதாவது ராஜி ஓடிப்போய் கல்யாணம் பண்ணின விஷயம் அவருடைய அப்பாவிற்கு கூட ரொம்ப பெரிய கஷ்டத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்த ஒரு விஷயத்தை அடிக்கடி சொல்லி முத்துவேல் மனதை ரணகளப்படுத்தி கோபத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வருகிறார் சக்திவேல். அதற்கு காரணம் அப்படி செஞ்சால் தான் ராஜி திரும்பவும் இந்த வீட்டில் வந்து ஓட்ட முடியாது.

அத்தனை சொத்துக்களுக்கும் தன்னுடைய பிள்ளையை வாரிசாக கொண்டு வரலாம் என்று எப்பொழுதுமே குடும்பத்திற்குள் பிரச்சினையை ஏற்படுத்தி அதன் மூலம் சக்திவேல் குளிர் காய்ந்து வருகிறார். அதன்படி சக்திவேல் உசுப்பேத்தியதால், முத்துவேலு மற்றும் பொண்டாட்டிக்கு இடையே பிரச்சனை வந்துவிட்டது. இதனை தடுக்க முயன்ற பாண்டியனின் மாமியாருக்கு உடம்பு சரி இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

இதனை தெரிந்த கோமதி, அம்மாவிற்காக சமைத்து பழனிச்சாமிடம் சாப்பாட்டை கொடுத்து விட நினைக்கிறார். அப்படி பழனிச்சாமி சாப்பாடு கொண்டு போகும்பொழுது பாண்டியன் அங்கே வந்து விடுகிறார். பிறகு இது என்னது என்று கேட்கும் பொழுது கோமதி, அம்மா உடம்பு சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருப்பதால் வீட்டு சாப்பாடு சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்பதால் நான் சமைத்துக் கொடுத்திருக்கிறேன் என்று சொல்கிறார்.

இதை கேட்டதும் பாண்டியன், உங்க அம்மா மீது எனக்கு எந்தவித கோபமும் இல்லை அவங்களுக்கு கொடுக்க வேண்டிய சாப்பாட்டை நீ ஏன் மறைத்து கொடுக்க வேண்டும். அப்படி எல்லாம் ஒன்னும் அவசியமே இல்லை நீ தைரியமாக கொண்டு போய் கொடுத்துட்டு வா என்று பழனிச்சாமிடம் சாப்பாடு கொடுக்க சம்மதம் தெரிவித்து விட்டார்.

உடனே நம்முடைய மாமனார் எவ்வளவு நல்லவர் என்று ராஜி, மீனா மற்றும் தங்கமயில் அனைவரும் ஒற்றுமையாக நின்று சந்தோஷப்பட்டு கொள்கிறார்கள். ஆனால் இந்த பிரச்சினை முடிந்த பிறகு பாண்டியன் குடும்பத்திற்கு மிகப்பெரிய பூகம்பமே வெடிக்கப் போகிறது என்று சொல்லும் அளவிற்கு குமரவேலுவின் ஆட்டம் ஆரம்பமாகப் போகிறது.

அதாவது சக்திவேல், தன்னுடைய பையனுக்கு எங்கேயும் பொண்ணு கிடைக்க மாட்டேங்குது என்ற ஆதங்கத்தில் குமரவேலுமிடம் நீ பாண்டியனின் மகளை கல்யாணம் பண்ணி விடு என்று சொல்லி இருக்கிறார். அதன்படி நேரம் சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் குமரவேலு யாரும் எதிர்பார்க்காதபடி அரசி கழுத்தில் தாலி கட்டி பாண்டியன் குடும்பத்தில் ஒரு அசம்பாவிதத்தை ஏற்படுத்த போகிறார்.

Trending News