புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தங்கமயிலை உதாசீனப்படுத்திய பாண்டியன், தவிக்கும் ராஜி.. பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் மீனா

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயில் பற்றிய விஷயங்கள் பாண்டியன் குடும்பத்திற்கு தெரிய வருகிறதோ இல்லையோ, ஆனால் ஹோட்டலில் புக் பண்ணியதில் தில்லாலங்கடி வேலையை பார்த்திருக்கிறார் என்பது குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிந்து விட்டது. இதனால் கடும் கோபத்தில் இருக்கும் பாண்டியன், தங்கமயிலை உதாசீனப்படுத்தும் விதமாக கண்டுகொள்ளாமல் பேசாமல் விடுகிறார்.

ஆனால் தங்கமயில் எல்லோரும் தன் மீது கோபமாக இருக்கிறார்கள் என்று நினைத்து ரூமுக்குள்ளே அடைந்து ஆழுது புலம்புகிறார். மீனா மற்றும் ராஜி, சமாதானப்படுத்தி சாப்பிடுவதற்கு கூப்பிட்டாலும் வரமாட்டேன் என்று மறுத்து விடுகிறார். பிறகு சரவணனிடம் சாப்பாடு கொடுத்து தங்கமயில் அக்காவை சாப்பிட சொல்லுங்கள் என சொல்லி மீனா சாப்பாடு கொடுக்கிறார்.

சரவணன் ரூமுக்குள் சாப்பாடு எடுத்துட்டு போகிறார். இதை பார்த்த பாண்டியன், எப்படியோ தங்கமயில் சாப்பிட்டா சரி என்று போகிறார். அப்பொழுது கோமதி, பாண்டியனுக்கு அட்வைஸ் பண்ணும் விதமாக பிள்ளைகள் மூன்று பேருக்கும் கல்யாணம் ஆகி மருமகள்கள் வந்துவிட்டார்கள். இதனால் பிள்ளையிடம் பேசும் போது பார்த்து கவனமாக பேச வேண்டும்.

இல்லை என்றால் அவர்களுக்குள் சண்டை வந்து குடும்பம் இரண்டாக பிரியும் அளவிற்கு மோசமாகிவிடும். அதனால் கொஞ்சம் கவனமாக இருங்கள், எப்பொழுதும் கதிரை மட்டம் தட்டி பேசாதீர்கள். ராஜி என்னிடம் சண்டைக்கு வருகிறார், எப்படி உங்க வீட்டுக்காரர் என் வீட்டுக்காரரை அடிக்க கை ஓங்கலாம் திட்டுகிறார் என கேட்கிறார். கதிர் மீது தப்பே இல்லை என்றாலும் மாமா ஏன் கோபமாகவே நடந்து கொள்கின்றார் என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.

இதனால் பிள்ளைகளுக்கு இடையே ஒற்றுமை இல்லாமல் போய் விடும் என்ற அட்வைஸ் பண்ணுகிறார். ராஜியும் தனக்கு பிடிக்காத கல்யாணம் நடந்திருந்தாலும் கதிரை எந்த இடத்திலும் யாரிடமும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் கோமதி இடம் கரராக பேசி தன்னுடைய தவிப்பை எதார்த்தமாக எடுத்துச் சொல்கிறார். இதை எல்லாம் பார்த்த மீனா மற்றும் கோமதி, இப்படியே ராஜி மற்றும் கதிர் மனசார புரிந்துகொண்டு ஒற்றுமையாக வாழ்ந்தால் சந்தோசம் என சொல்கிறார்கள்.

அடுத்ததாக மீனா, தங்கமயில் சாப்பிடாமல் இருப்பதை நினைத்து பீல் பண்ணி சரவணனிடம் பேசுகிறார். ஆனால் மீனா செய்வது எப்படி இருக்கிறது என்றால் பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல் இருக்கிறது. ஏனென்றால் சரவணன் மற்றும் தங்கமயில் பனமில்லாமல் ஹோட்டலில் தவிக்கிறார்கள் என்ற விஷயம் முதலில் செந்திலுக்கு தான் தெரிந்தது.

அப்பொழுது முதலில் செந்தில் மீனாவிடம் தான் படம் கேட்டார். மீனாவிடம் பணம் இருந்தும் தங்கமயிலுக்காக நான் கொடுக்க முடியாது என்று மறுத்துவிட்டார். அப்பொழுதே கொடுத்திருந்தால் இப்பொழுது இவ்வளவு பெரிய பிரச்சனை ஆகியிருக்காது. தங்கமயில் மற்றும் கதிருக்கும் இந்த மாதிரி ஒரு அவமானம் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்காது. தற்போது எதுவுமே நடக்காத மாதிரி எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை என்பதற்கு ஏற்ப மீனா நடந்து கொள்கிறார்.

Trending News