வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

பாண்டியனின் மருமகளுக்கு சரவணன் வைத்த ஆப்பு.. பொட்டிப் பாம்பாக அடங்கிய தங்கமயில், கோபத்தில் ராஜி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியன், மீனா மற்றும் ராஜி மீது கோவப்பட்டதற்காக அவர்களை சமாதானப்படுத்தி விட்டார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத தங்கமயில் ஏமாற்றம் அடைந்து விட்டார். ஏனென்றால் பாண்டியன் பண்ணின ஆர்ப்பாட்டத்திற்கு பிரச்சினை பெருசாக வெடிக்கும் அதன் மூலம் குளிர் காயலாம் என்று தங்கமயில் நினைத்திருந்தார்.

ஆனால் பிரச்சனை பெருசாகாமல் புஸ் என்று முடிந்து விட்டது. உடனே சூட்டோட சூட்டாக வேறு பிரச்சினையை கொண்டு வர வேண்டும் என்று வீட்டிற்கு வந்த சரவணன் இடம் தலையணை மந்திரம் போட ஆரம்பித்து விட்டார். அதாவது மாமா, பிரச்சினையே சுமூகமாக முடித்து விட்டார். நான் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. எங்க வீட்டில் எல்லாம் பிரச்சனை நடந்தால் அது கொஞ்ச நாளைக்கு இழுத்துக் கொண்டே போகும்.

சரவணன் கேட்ட கேள்வியால் ஆடிப் போன தங்கமயில்

இங்கே எல்லாம் பரவாயில்லை உடனே முடிந்து விட்டது என்று சரவணன் இடம் சொல்கிறார். உடனே சரவணன் நல்ல விஷயம் தானே, எங்க அப்பா கோபத்தில் திட்டுவாரு தவிர அவருக்கு எல்லாருமே ஒன்னு தான். கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் உண்டு. அதனால் எங்க அப்பா மனசு தங்கம் அதை புரிந்து கொள் என்று சொல்கிறார். ஆனாலும் தங்கமயில், ராஜி என்னிடம் பேசியது தவறுதான். அதைப் பற்றி நீங்கள் ஏன் எதுவுமே கேட்காமல் இருக்கிறீர்கள் என்று கேட்கிறார்.

உடனே சரவணன், நான் ஒன்னு சொல்லட்டுமா என்று தங்கமயில் இடம் கேட்கிறார். அதற்கு தங்கமயில் சொல்லுங்க மாமா என்று சொல்லிய நிலையில், நீ படித்து முடித்துவிட்டு வீட்டில் சும்மா இருக்க போய் தான் இவ்ளோ யோசிக்கிறாய். அதனால் நீயும் வேலைக்கு போ, நான் அப்பாவிடம் கேட்டு சொல்கிறேன். நீ வேலைக்கு போய்விட்டால் உனக்கு இந்த மாதிரி எண்ணம் எல்லாம் வராது என்று சரவணன் சொல்கிறார்.

இதை கேட்டதும் தங்கமயில் என்னடா வம்பா போச்சு, பிரச்சனை நமக்கு நேராக திரும்புகிறது என்று யோசிக்கிறார். நம்மளுக்கு படிப்புக்கும் சம்பந்தமே இல்லை, நம்மள போய் வேலைக்கு போக சொன்னால் எப்படி நம்ம பண்ணுன பித்தலாட்டம் எல்லாம் வெளியே வந்து விடுமே என்ற பயத்தில் நானும் வேலைக்கு போய்விட்டால் அத்தைக்கு யாரு வீட்டில் இருந்து உதவி பண்ணுவார்.

அதனால் எனக்கு வேலைக்கு போக வேண்டும் என்று ஆசை கொஞ்சம் கூட கிடையாது என்று சொல்லி தூங்க போய்விட்டார். தூங்கும் போது மனதிற்குள் புலம்பிக்கொண்டே தூங்குகிறார். ஆனால் உண்மையிலேயே சரவணன் எடுத்த முடிவு தான் சரியான முடிவு. வேலைக்கு போக சொல்லி தங்கமயிலுக்கு ஆப்பு வைக்க நினைத்தார். ஆனால் அதிலிருந்து எஸ்கேப் ஆகி பொட்டிப் பாம்பாக அடங்கி விட்டார்.

இதனைத் தொடர்ந்து கதிரை அனைவரது முன்னிலையும் அடித்து விட்டாரே என்ற கோபத்தில் ராஜி ஃபீல் பண்ணுகிறார். என்ன இருந்தாலும் மாமா பண்ணினது தவறுதான் என்று அத்தையிடம் உச்சகட்ட கோபத்தை காட்டுகிறார். அதற்கு கோமதி, எல்லாம் என் மீது தான் தவறு. உங்க கல்யாணத்துக்கும் கதிருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நான் தான் பண்ணி வைத்தேன் என்று மாமாவிடம் சொன்னால் கதிர் மீது இவ்வளவு கோபப்பட மாட்டார் என்று கோமதி சொல்கிறார்.

இதை கேட்டு அதிர்ச்சியாகி மீனா மற்றும் ராஜி நிற்கிறார்கள். ஆனால் இந்த ஒரு விஷயம் கோமதி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, தங்கமயிலுக்கு தெரிஞ்சால் மட்டும் போதும் பாண்டியனுக்கு தெரிந்துவிடும். வீடே ரெண்டாக மாறிவிடும். தங்கமயிலுக்கு தெரியாத வரை கோமதி கிரேட் எஸ்கேப்.

பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News