புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஆர்வக்கோளாறால் செந்திலிடம் மாட்டிக்கொண்ட பாண்டியன் மருமகள்.. ராஜி காதலை சுக்குநூறாக உடைத்த கதிர்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜியின் அம்மா வடிவு நகை அனைத்தையும் ராஜியிடம் கொடுத்துவிட்டார். ஆனால் இந்த ஒரு விஷயம் முத்துவேல் மற்றும் சக்திவேலுக்கு தெரியாது. தற்போது குமரவேலுவின் திருமணம் நடைபெற இருப்பதால் வடிவு நகை எங்கே என்று முத்துவேல் கேட்க ஆரம்பித்து விட்டார். அதற்கு வடிவு, லாக்கரில் வைத்திருக்கிறேன் என்று சமாளித்தார்.

ஆனால் பெண் வீட்டார்கள் வீட்டிற்கு வரும் நேரத்தில் அந்த லாக்கரிலிருந்து நகை எடுத்துட்டு வந்து போட்டுக்கோ என்று சொல்லி இருக்கிறார். ஆனால் நகை இல்லாததால் பெண் மீட்டர்கள் முன்னாடி நகை இல்லாமல் வடிவு இருந்தார். பிறகு அவர்கள் போன பொழுது நகையை கேட்டு முத்துவேல் பிரச்சினை பண்ணினார். இதனால் சமாளிப்பது எப்படி என்று தெரியாத வடிவு நகை அனைத்தையும் என்னுடைய அண்ணன் பிசினஸுக்கு உதவுவதற்கு கொடுத்து விட்டேன் என்று சொல்லிவிட்டார்.

ராஜி தலையில் இடியை இறக்கிய கதிர்

இதை ஏற்றுக்கொள்ள முடியாத சக்திவேல், தற்போது வடிவு அண்ணனை வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விடுகிறார். பிறகு நகை பற்றி கேட்கும் பொழுது வடிவு அண்ணன் என்னிடம் எந்த நகையும் இல்லை யாரிடமும் நான் வாங்கவில்லை. அந்த அளவிற்கு என்னுடைய தரம் குறைந்து போகவில்லை என்று சொல்லி கிளம்பிவிட்டார். இதை பார்த்த முத்துவேல் கோபத்தில் வடிவிடம் சண்டை போட்டு நகை என்ன பண்ணினாய் என்று கேட்டார்.

ஆனால் வடிவு எதையும் சொல்லாமல் மௌனமாக நின்றதால் என்னிடம் உண்மையான காரணம் சொல்லும் வரை இந்த வீட்டில் நீ பச்ச தண்ணி எதுவும் குடிக்க கூடாது சாப்பிடக்கூடாது என்று சொல்லிவிட்டார். இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் காந்திமதி, வடிவு மற்றும் மாரி அனைவரும் புலம்பிக் கொள்கிறார்கள்.

இதனை அடுத்து ராஜி, டியூஷன் எடுக்கும் விஷயத்தை கதிரிடம் மறைத்து வைத்திருப்பதால் குற்ற உணர்ச்சில் ரொம்பவே பீல் பண்ணுகிறார். ஆனால் இதை எப்படி கதிரிடம் சொல்வது என்று தெரியாத நிலையில் ராஜி, கதிரிடம் நான் ஏதாவது உங்களிடம் பொய் சொல்லி மறைத்தால் நீங்கள் என்ன பண்ணுவீர்கள் என்று கேட்டார். அதற்கு கதிர் நான் ஒன்னும் பண்ண போறது இல்லை கோபம் பட மாட்டேன்.

ஏனென்றால் உனக்கும் எனக்கும் பெருசாக என்ன உறவு இருக்கிறது. மற்றவர்களை பொறுத்தவரை நாம் இந்த ரூமில் தங்கிக் கொள்ளும் கணவன் மனைவி அவ்வளவுதான். மற்றபடி நீ உன் இஷ்டம் போல் இருக்கலாம், நான் எதுவும் கேட்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். இதை கேட்ட ராஜி மனசு சுக்கு நூறாக உடைந்தது போல் மனதுக்குள்ளயே கதிரை திட்டிக் கொண்டு புலம்பிக் கொள்கிறார்.

அடுத்ததாக சரவணன், தங்கமயிலுக்காக ஒரு புடவை வாங்கிட்டு வந்து கொடுத்தார். இதை பார்த்த சந்தோஷத்தில் தங்கமயில் அம்மாவுக்கு போன் பண்ணி பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் சரவணன் தூங்கி எழுந்து பார்த்து தங்கமயிலிடம் நீ இன்னும் தூங்கவில்லையா? என்று கேட்கிறார். தூக்கம் வரவில்லை அதன் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தேன் என்று சொல்கிறார்.

பிறகு தங்கமயில், நான் ஏதாவது உங்களிடம் பொய் சொல்லி உண்மையை மறைத்தால் நீங்கள் என்ன பண்ணுவீர்கள் என்று கேட்டார். அதற்கு நமக்கு பிடித்தவர்களிடம் நாம் யாரும் பொய் சொல்ல மாட்டோம், உண்மையை மறைக்கவும் மாட்டோம். அப்படி ஏதாவது ஒரு சூழ்நிலை வந்தால் எனக்கு நிச்சயம் கோபம் வரும் என்று சொல்லி தூங்கி விடுகிறார்.

இதனால் பயந்து போன தங்கமயில் விடிய விடிய தூங்காமல் பொய் பித்தலாட்டம் பண்ணியதை நினைத்து பார்க்கிறார். அடுத்ததாக மறுநாள் சரவணன் மற்றும் தங்கமயில் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை எடுக்கிறார்கள். இதை வழக்கம்போல் ஆர்வக்கோளாறால் தங்கமயில் குரூப்பில் அனுப்பி விடுகிறார். இதை பார்த்த செந்தில் சரவணனுக்கு ஃபோன் பண்ணி பேசுகிறார்.

உடனே சரவணன், தங்கமயில் அனுப்பிய போட்டோக்கு நீங்க யாரும் பதில் சொல்லவில்லை என்று அவள் பீல் பண்ணுகிறார் என்று சொல்கிறார். அதற்கு செந்தில் அண்ணி அனுப்பிய போட்டோக்கு யாரும் மெசேஜ் பண்ண முடியாது. என்ன போட்டோவை அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்று பாரு என சொல்லிய நிலையில் சரவணன் மற்றும் தங்கமயில் அந்த போட்டோக்களை பார்த்து அதிர்ச்சியாக நிற்கிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News