Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், சரவணன் மற்றும் தங்கமயில் ஹோட்டலில் சொகுசாக தங்குவதற்கு பணத்தை ஏற்பாடு பண்ணி கொடுத்த கதிர் தற்போது பாண்டியனிடம் மாட்டிக் கொள்ளப் போகிறார். அதாவது வழக்கம்போல் பாண்டியன் கடை கணக்கை வீட்டில் வந்து அரசியை எழுதி கணக்கு பார்க்க சொல்கிறார்.
அப்படி அரசி கணக்கு பார்க்கும் பொழுது 1000 ரூபாய் குறைகிறது என்று சொல்கிறார். அப்பொழுது பாண்டியன், செந்தில் மற்றும் பழனிச்சாமிடம் ஏதாவது கணக்கு விட்டுப் போய் இருக்கிறதா என்று கேட்கிறார். அவர்கள் எதுவும் இல்லை சரியாகத்தான் இருக்கிறது என்று சொல்லிய நிலையில் பாண்டியனுக்கு சந்தேகம் கதிர் மீது திரும்புகிறது.
பாண்டியன் வீட்டில் வெடிக்கப் போகும் பிரச்சனை
உடனே பாண்டியன், அனைவரது முன்னாடியும் என்னைக்கும் இல்லாமல் இன்னைக்கு திடீரென்று கதிர் கடைக்கு வரும்பொழுது நினைத்தேன். பணத்துக்காக தான் வருகிறான் என்று அதே மாதிரி ஆயிரம் ரூபாய் கம்மியாக இருக்கிறது என்று சொல்லி கதிரை கூப்பிட்டு அவமானப்படுத்துகிறார். அப்பொழுது கதிர் நான் எதுவும் எடுக்கவில்லை என்று சமாளித்து பார்க்கிறார்.
அதற்கு பாண்டியன், என்னிடமிருந்து இப்படி பணத்தை எடுத்து தான் எனக்கு மாசம் மாசம் பணம் கொடுக்கிறியா என்று அசிங்கப்படுத்தும் விதமாக கதிரின் இமேஜை டேமேஜ் பண்ணுகிறார். இதுக்கு மேலையும் விட்டால் பிரச்சினை பெருசாகிவிடும் என்பதால் செந்தில் பொய்யான கணக்கை சொல்லி ஒருவர் கம்மியாக தான் பணம் கொடுத்திருக்கிறார் என்று சமாளித்து விட்டார்.
இதை நம்பிய பாண்டியன் பிரச்சனை பண்ணாமல் அப்படியே போய்விட்டார். ஆனால் அந்த நபரிடம் கேட்கும் பொழுது தான் செந்தில் மாட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதற்குள் அக்கவுண்டில் இருந்த பத்தாயிரம் பணமும் எப்படி டிரான்ஸ்பர் ஆனது என்று பாண்டியன் கண்டுபிடித்து விடுவார். ஆக மொத்தத்தில் இந்த இரண்டு விஷயத்தையும் வைத்து செந்தில் மற்றும் கதிர் வசமாக பாண்டியனிடம் சிக்க போகிறார்.
இதனை தொடர்ந்து சரவணன் மற்றும் தங்கமயில் ஹோட்டலில் சந்தோஷமாக பேசிக்கொண்டு எடுத்த போட்டோவை பார்த்து சந்தோஷப்பட்டு கொள்கிறார்கள். அத்துடன் அந்த போட்டோவை குடும்பத்தில் இருக்க அனைவருக்கும் அனுப்பி வைக்கிறார். அப்பொழுது இதைப் பார்த்த தங்கமயிலின் தங்கை சந்தோஷத்துடன் அனைத்து போட்டோக்களையும் பாக்கியத்திடம் காட்டுகிறார்.
உடனே பாக்கியம், சந்தோஷப்படாமல் தங்கமயிலுக்கு போன் பண்ணி திட்டுகிறார். இப்படி நீ சந்தோஷமாக இருக்கவா அங்க போனாய், இதுதான் சான்ஸ் என்று மாப்பிள்ளையை கவுக்க உனக்கு தெரியாதா? ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் உடனே அதை மறந்து பேசிட கூடாது. ஹோட்டலில் பணம் இல்லாமல் வெளியே ரொம்ப நேரம் நின்னு அசிங்கப்படுத்துவதை வைத்து இரண்டு நாள் சண்டை போட்டு உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் அளவிற்கு தந்திரமாக நீ நடந்து இருக்க வேண்டும்.
அதை விட்டுவிட்டு போட்டோ எடுக்கவும், சாப்பிடுவது பற்றியும் பேசி இந்த மூணு நாள் சந்தோஷத்தை மட்டும்தான் நீ யோசிக்கிறாய். ஆனால் அடுத்து எத்தனை வருஷம் ஆனாலும் உன் பேச்சைக் கேட்கும் அளவிற்கு மாப்பிள்ளையே மாற்ற உனக்கு தெரியாதா? உன் பேச்சைக் கேட்டால் மட்டும் தான் நாளைபின்ன உன்னுடைய விஷயங்களை பற்றி தெரிந்தாலும் உனக்காக சப்போர்ட் பண்ணி உன் கூட நிற்பார்.
அப்பொழுது உன்னுடன் இருக்கும் பொழுது கையில் பணம் இல்லாமல் இருந்தால் எப்படி சமாளிப்பாய்? அதனால் இப்பொழுது அவரிடம் பேசி சம்பாதிக்கிற பணத்தை நீ கைவசம் வைத்துக் கொள்ளும் அளவிற்கு காரியத்தை சாதித்துக் காட்ட வேண்டும் என்று தங்கமயில் மண்டையில் பல விஷயங்களை சொல்லி மந்திரம் போட்டு விட்டார்.
இதைக் கேட்ட தங்கமயிலும் அம்மா பேச்சைக் கேட்டு, சரவணனிடம் சண்டை போடுவதற்கு தயாராகி விட்டார். இப்படியே போனால் தங்கமயில் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும், ஏனென்றால் என்ன ஆனாலும் சரவணன் குடும்பத்தை விட்டுக் கொடுக்க மாட்டார். அப்படி இருக்கும் பொழுது பாக்கியம், நல்லா இருந்த மகள் வாழ்க்கையில் சூனியம் வைத்தது போல் மண்ணள்ளி போட்டு விட்டார்.
இன்னொரு பக்கம் ராஜி யாருக்கும் தெரியாமல் டியூஷன் எடுக்கிறார். அதே மாதிரி அம்மாவிடம் இருந்து நகை தற்போது ராஜியிடம் இருக்கிறது என்று சக்திவேல் மற்றும் முத்துவேலுக்கு தெரிந்துவிட்டால் நிச்சயம் இதை வைத்து பாண்டியனை அவமானப்படுத்தும் விதமாக பேசி சண்டையை இழுக்க போகிறார். ஆக மொத்தத்தில் ஏதோ ஒரு தரமான சம்பவம் காத்துக் கொண்டிருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்
- பாண்டியனை புரிஞ்சிக்க முடியாமல் தவிக்கும் செந்தில்
- கதிரை பாண்டியனிடம் மாட்டிவிட்டு உல்லாசமாக இருக்கும் தங்கமயில்
- பாண்டியன் கடையில் கல்லாப்பெட்டியில் கையை வைத்த கதிர்