வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

தங்கமயில் பிளானில் முதல் பலிகாடாக சிக்கிய பாண்டியனின் மகன்.. அவமானத்தில் அழுது புலம்பும் மீனா

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயில் அம்மாவிற்கு ஃபோன் பண்ணி சரவணன் என்னை கண்டுக்கவே மாட்டேங்கிறார். குடும்பம் தம்பிகள் என பாசத்தை பொழிந்து என்னை ஒதுக்குகிறார் என்று எனக்கு பயமாக இருக்கிறது என புலம்புகிறார். உடனே பாக்கியம், இதற்கு ஒரே வழி அந்த குடும்பத்தில் உன்னுடைய கை ஓங்க வேண்டும்.

அதற்கு உன் புருஷன் உன் பேச்சே கேட்கும்படி நீ அவரை மாற்ற வேண்டும். அப்போதான் நீ அங்க ராஜ்ஜியம் பண்ண முடியும் என்று தங்கமயிலுக்கு தேவையில்லாத ஐடியாக்களை கொடுத்து குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்துவதற்கு போட்டுக் கொடுக்கிறார். அதன்படி தங்கமயிலும் அம்மா சொன்னதுக்கு எல்லாத்துக்கும் தலையாட்டி விட்டார்.

புலம்பி தவிக்கும் மீனா

அந்த வகையில் சரவணன் மாமாவுக்கு இன்று சாப்பாடு கொண்டு போக கூடாது. அவர் ஏன் எதுக்கு என்று யோசிக்கும் பொழுது மெதுவாக பேசி தன் பக்கம் இழுத்து விட வேண்டும் என்று தங்கமயில் பிளான் பண்ணி விட்டார். உடனே கோமதியிடம், நான் இன்று சாப்பாடு எடுத்துட்டு போகவில்லை என்று சொல்கிறார். அதற்கு கோமதி அப்படியா சந்தோசம் நீ போய் ரெஸ்ட் எடு என்று தங்கமயிலை நோஸ்கட் பண்ணி விடுகிறார்.

உடனே தங்கமயில் ரூமுக்குள் போய் அழுது சீன் போடுகிறார். இது தெரியாத சரவணன், நேரமாகிவிட்டது இன்னும் ஏன் சாப்பாடு கொண்டு வரவில்லை என்று தங்கமயிலுக்கு போன் பண்ணி பார்க்கிறார். பொண்டாட்டி போன் எடுக்கவில்லை என்றதும் அம்மாவிற்கு ஃபோன் பண்ணி என்ன ஆச்சு ஏன் இன்னும் சாப்பாடு கொண்டு வரவில்லை என்று கேட்கிறார்.

அதற்கு கோமதி, தங்கமயிலுக்கு கொஞ்சம் சோர்வாக இருக்கிறது என்று தூங்குகிறாள் என சொல்கிறார். இதை கேட்டதும் சரவணன் மனசு உடைந்து போய் வீட்டிற்கு வந்து தங்கமயிலிடம் பேச வருகிறார். உடனே இதுதான் சான்ஸ் என்று அம்மா சொன்னபடி புருஷனிடம் உங்களுக்கு என் மேல் பாசமே இல்லை. என்னை கண்டுக்கவே இல்லை, எனக்காக நேரம் ஒதுக்க மாட்டிக்கிங்க என்று சாமர்த்தியமாக பேசுகிறார்.

உடனே சரவணன் நான் என்ன செய்தால் என் பாசத்தை நீ புரிந்து கொள்வாய் என்று கேட்க, அதற்கு தங்கமயில் நாம் இருவரும் ஹனிமூன் போக வேண்டும். அதற்கு ஏற்பாடுகள் பண்ணினால் நான் அப்பொழுது புரிந்து கொள்கிறேன் என்று சொல்ல அதற்கு சரவணன் ஓகே என்று தலையாட்டி விடுகிறார். இதனால் பாண்டியன் மற்றும் சரவணனுக்கு இடையில் மனஸ்தாபங்கள் வரப்போகிறது.

கடைசியில் தங்கமயில் போட்ட பிளானில் சரவணன் சிக்க போகிறார். இதற்கிடையில் மீனா செந்திலை கூட்டிட்டு அவருடைய அப்பாவின் ஐம்பதாவது பிறந்த நாள் என்பதால் கோவிலுக்கு போய் அர்ச்சனை செய்கிறார். அந்த நேரத்தில் மீனாவின் அப்பா அம்மா கோவிலுக்குள் வருகிறார்கள். அவர்களைப் பார்த்து சந்தோஷத்தில் மீனா பேச போகிறார். ஆனால் மீனாவின் அப்பா கோபமாக இருப்பதால் மீனா மற்றும் செந்திலை அவமானப்படுத்தி அசிங்கமாக பேசி விடுகிறார். இதனால் நொந்து போன மீனா செந்தில் இடம் அழுது புலம்புகிறார்.

இதனை தொடர்ந்து ராஜ்ஜியின் அண்ணன் குமரவேலுக்கு பொண்ணு பார்க்க விஷயம் நடக்கப் போகிறது. அதை பாண்டியன் வயிற்றெரிச்சல் படும்படி பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்று ராஜியின் அப்பா மற்றும் சித்தப்பா பிளான் பண்ணுகிறார்கள். அதனால் மறுபடியும் பாண்டியன் குடும்பத்திற்கும் இவர்களுக்கும் ஒரு கலவரம் நடக்கப்போகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த சம்பவங்கள்

Trending News