வியாழக்கிழமை, நவம்பர் 14, 2024

நம்பி மோசம் போன ஆறு வெற்றி படங்களில் பார்ட் 2.. மிரளவைத்த கேஜிஎப் படத்தின் பரிதாபம்

இந்த காலத்தில் வெளிவரும் படங்கள் அனைத்துமே மக்களுக்கு பிடித்தால் மட்டுமே போதும். அதில் யாரு பெரிய ஹீரோ, எந்த இயக்குனர் எடுக்கிறார்கள் என்பதெல்லாம் முக்கியமில்லை. அவர்களுக்கு தேவை கொடுத்த டிக்கெட் காசுக்கு படம் என்டர்டைன்மென்ட் ஆக இருந்தால் அதுவே போதும். அப்படி சில படங்களை ரசிகர்கள் ரசித்துப் பார்த்து ஆகா ஓகோ என்று வரவேற்புகளை கொடுத்து வந்திருக்கிறார்கள். அந்த வகையில் பார்ட் 2 எடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் அந்த படத்தை நம்பி பார்க்கப் போகும் போது அது மோசமான வரவேற்பை பெற்றிருக்கிறது. அப்படி பார்ட் 2வில் சொதப்பிய படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

ஜெய்ஹிந்த் 2: 1994 ஆம் ஆண்டு அர்ஜுன் இயக்கத்தில் ஜெய்ஹிந்த் படம் வெளிவந்தது. இப்படம் மக்கள் உணர்வுபூர்வமாக கொண்டாடி அதிக வரவேற்பை கொடுத்து வெற்றியடைய வைத்தார்கள். இதனால் மறுபடியும் 2012 ஆம் ஆண்டு ஜெய்ஹிந்த் பார்ட் 2 என்று வெளியானது. இந்த படத்தையும் அர்ஜுனே இயக்கி, தயாரித்து நடித்து இருக்கிறார். அத்துடன் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடப்பட்டது. ஆனால் தமிழ் மற்றும் தெலுங்கில் பெருசாக எடுபடாமல் போய்விட்டது. அதற்கு பதிலாக கன்னடத்தில் சிறந்த திரைப்படத்திற்கான மாநில திரைப்பட விருதை வென்றது.

Also read: 5 ஹீரோக்களின் வாழ்க்கையை தூக்கி நிறுத்திய லோகேஷ்.. அர்ஜுன் தாஸ்க்கு கொடுக்கப்பட்ட அதிக வாய்ப்பு

திருட்டுப்பயலே 2: 2006 ஆம் ஆண்டு சுசி கணேசன் இயக்கத்தில் ஜீவன், சோனியா அகர்வால் நடிப்பில் திருட்டுப் பயலே திரைப்படம் வெளிவந்தது. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் 2017 ஆம் ஆண்டு இதனுடைய இரண்டாம் பாகத்தை எடுத்து வெளியிட்டார். இதில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் சமூக வலைதளங்களின் மூலம் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதை தட்டி கேட்கும் விதமாக படம் எடுக்கப்பட்டிருக்கும். இது விமர்சன ரீதியாக சராசரியான வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக ரொம்பவே அடிவாங்கியது.

ஜித்தன் 2: ஜித்தன் ரமேஷ் நடிப்பில் ராகுல் பிரமஹம்சா இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு ஜித்தன் திரைப்படம் வெளிவந்தது. இப்படம் தான் ஹீரோவுக்கு ஒரு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் கொடுத்த படமாக மக்களிடம் வரவேற்பை பெற்றது. அதனால் மறுபடியும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்தால் கேரியரை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று ஜித்தன் ரமேஷ் ஒரு முயற்சி எடுத்து நடித்தார். ஆனால் இந்த படம் எப்போ வந்தது என்று தெரியாத அளவிற்கு கூட போய்விட்டது. அந்த அளவிற்கு படம் மொக்கையாக இருந்தது.

Also read: 2வது மனைவியாக கழுத்து நீட்டிய 5 நடிகைகள்.. அந்தரங்க உறவால் முறிந்த விஷ்ணு விஷால் திருமணம்

வெண்ணிலா கபடி குழு 2: செல்வ சேகரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடி குழு 2019 ஆம் ஆண்டு வெளிவந்தது. இப்படத்தின் முதல் பாகம் ஏற்கனவே 2009 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்தது. அப்பொழுது படம் எதார்த்தமான கதையும் நடிப்பையும் கொடுத்ததால் மக்கள் விரும்பி பார்த்தார்கள். ஆனால் இரண்டாம் பாகத்தில் விக்ராந்த் மற்றும் பசுபதி நடிப்பில் வந்த இப்படம் மக்களிடம் எடுபடாமல் போய்விட்டது.

பொன்னியின் செல்வன் 2: கடந்த வருடம் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் பிரம்மாண்டமாக வரலாற்றுக் கதையுடன் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மக்கள் அதிகமான எதிர்பார்ப்புகளை வைத்து காத்துக் கொண்டிருந்தார்கள். அந்த வகையில் இந்த வருடம் வெளிவந்த இரண்டாம் பாகம் மக்கள் எதிர்பார்ப்பை சுக்கு நூறாக ஆக்கியது போல் கலவையான விமர்சனங்களை பெற்று மணிரத்தினருக்கு ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்திக் கொடுத்தது.

KGF 2: பிரசாந்த் நீல் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த கேஜிஎப் படம் அனைவரையும் மிரள வைத்து மக்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கடந்த வருடம் இப்படத்தின் பார்ட் 2 அதே மாதிரியாக வெளியிடப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு இரண்டாம் பாகம் மக்களிடம் செல்லுபடியாகவில்லை. அந்த வகையில் இப்போது வரை கேஜி எஃப் படத்தின் முதல் பாகம் மட்டுமே நிலையாக நிற்கிறது. இரண்டாம் பாகம் வந்த சுவடு தெரியாமல் பரிதாபமாக போய்விட்டது.

Also read: தமிழ்நாட்டில் வசூலை வாரி குவித்த முதல் 5 படங்கள்.. இரண்டே வாரத்தில் விக்ரமை துவம்சம் செய்த பொன்னியின் செல்வன்

- Advertisement -spot_img

Trending News