சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

எல்லை மீறி பேசிய பார்த்திபன், பாரதிராஜா.. பொது இடத்தில் இப்படியா பேசுறது

ஒரு இயக்குனராக பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கும் பார்த்திபன் மற்றும் பாரதிராஜா இருவரும் தற்போது நடிப்பிலும் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் இருவரும் தற்போது ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

தமிழில் பிரபல இயக்குனராக இருந்த லிங்குசாமி தற்போது தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து தி வாரியர் என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சத்தியம் தியேட்டரில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அந்த விழாவில் பாரதிராஜா, பார்த்திபன், மணிரத்தினம், சங்கர் உள்பட பல ஜாம்பவான்கள் கலந்து கொண்டனர். அதில் பல சுவாரஸ்யமான விஷயங்களும் பேசப்பட்டது மேலும் ரோபோ சங்கர் அந்த நிகழ்ச்சியை ஜாலியாக கொண்டு செல்கிறேன் என்ற பெயரில் படு மொக்கை போட்டார்.

விழாவிற்கு வருகை தந்திருந்த அனைத்து பிரபலங்களும் தங்களுக்கான நேரங்களில் பல விஷயங்கள் குறித்து பேசினார்கள். அப்போது பேசிய பாரதிராஜா, லிங்குசாமி மட்டும் ஒரு பெண்ணாக இருந்தால் நான் அவரை வைத்துக் கொள்வேன் என்று அநாகரிகமாக பேசினார்.

அதன் பிறகும் அந்த விஷயத்தை அப்படியே விடாமல் மேடையில் பேசுகிறோம் என்று கூட தெரியாமல் வாய்க்கு வந்ததை எல்லாம் அவர் பேசினார். அவரைத் தொடர்ந்து வந்த பார்த்திபன் பேசுகையில் பாரதிராஜா கூறியதையே வலியுறுத்தி படுமோசமாக பேசினார்.

அதாவது லிங்குசாமி மட்டும் பெண்ணாக இருந்திருந்தால் எத்தனை ஆண்களை வளைத்து போட்டு இருப்பார் என்று மிகவும் நாகரிகமற்ற முறையில் அவர் பேசினார். அவர்களுடைய இந்த பேச்சு தற்போது பலரும் முகம் சுழிக்கும் வகையில் இருக்கிறது.

திரையில் நாம் பார்த்து பிரமித்தவர்களே இப்படி எல்லை மீறி பேசியது பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர்கள் பேசியது குறித்து சோசியல் மீடியாவில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Trending News