பார்த்திபன் தனித்துவமான மற்றும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான ஒத்த செருப்பு படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது. தற்போது புது முயற்சியாக ஒரே ஷாட்டில் இரவின் நிழல் என்ற படத்தை எடுத்துள்ளார்.
இரவின் நிழல் படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தை பார்த்த பிரபலங்கள் எல்லோருமே வியந்து பாராட்டியதாக செய்திகள் வெளியானது. மேலும் இப்படத்தின் போஸ்டர், ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்நிலையில் இரவின் நிழல் படம் வருகின்ற ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் புரமோஷனுக்காக பார்த்திபன் பல்வேறு ஊடகங்களின் பேட்டி கொடுத்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் பிரமோஷனுக்காக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார்.
தற்போது பார்த்திபன் ஒரு பேட்டி ஒன்றில் சினிமாவில் கதாநாயகர்கள் அதிகப்படியான சம்பளம் வாங்குவது குறித்து பேசியிருந்தார். அதாவது படத்தின் மொத்த பட்ஜெட்டில் பெரும்பான்மையான தொகை படத்தின் ஹீரோக்கள் தான் செலவழிக்கப்படுகிறது. ஆனால் மொத்த படமும் எடுப்பதற்கு குறைவான செலவு தான் ஆகிறது.
இதனால் எப்படி ஒரு இயக்குனர் தரமான படத்தை கொடுக்க முடியும். அப்படியே நல்ல படங்கள் எடுத்தாலும் அதற்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை என பார்த்திபன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவர் சொல்வதும் சரிதான் என பலரும் கூறிவருகின்றனர்.
அதாவது பெரிய ஹீரோக்கள் ஒரு மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்து விட்டால் உடனே பல மடங்கு சம்பளத்தை உயர்த்தி விடுகிறார்கள். இதனால் தயாரிப்பாளர்களும் அந்த ஹீரோக்களை வைத்து படத்தை எடுக்க வேண்டும் என பல கோடிகள் செலவு செய்கிறார்கள். ஆனால் அந்தப் படம் ரசிகர்களுக்கு பிடித்தவாறு நல்ல கதையம்சத்துடன் இருக்கிறதா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.