வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

இல்லாமலே இருக்கிறேன் பிக்பாஸில்.. விஜய் சேதுபதி குறித்து பார்த்திபன் போட்ட பதிவு

Bigg Boss: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்முறையாக தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. ஆரம்பத்திலேயே அதிரடி என்பது போல் இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த 24 மணி நேரத்திலேயே முதல் எலிமினேஷன் நடைபெற்று இருக்கிறது.

அதுவும் மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு பெண்ணாக நடித்த சச்சனாவை எலிமினேட் செய்திருக்கிறார்கள். இது எதேர்ச்சையாக நடந்தது இல்லை, திட்டமிட்டு தான் நடந்திருக்கிறது என பலரும் தங்களுடைய ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.

கமல் இடத்தில் விஜய் சேதுபதி எப்படி, இவர் எப்படி இந்த மாதிரியான நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என எல்லோருக்குமே சந்தேகம் இருந்தது. ஆனால் மனுஷன் ஒரே நாளில் மொத்த பிக் பாஸ் ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்து விட்டார்.

விஜய் சேதுபதி வளவள என்று பேசுவார், காமெடி பண்ணுவார் என்று தான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் விஜய் சேதுபதியும் முதல் எபிசோடில் பேசிய அத்தனையுமே மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

போகப் போக விஜய் சேதுபதி பிக் பாஸ் போட்டியாளர்களை லாடம் கட்டி விடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கமல் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிய போது இந்த நிகழ்ச்சியை அடுத்து யார் தொகுத்து வழங்குவார்கள் என்பது எல்லோருக்கும் சந்தேகமாக இருந்தது.

அப்போது பலரது பெயரும் இதில் அடிபட்டது. அப்படி ஒருவர்தான் நடிகர் பார்த்திபன். பார்த்திபன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் எப்படி இருக்கும் என ரசிகர்கள் கற்பனை செய்து கூட பார்த்து வைத்திருந்தார்கள்.

விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய பார்த்திபன்

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் எபிசோடு முடிந்திருக்கும் நிலையில் விஜய் சேதுபதியை பார்த்திபன் புகழ்ந்து தள்ளி இருக்கிறார். விஜய் சேதுபதியை பற்றி தன்னுடைய லிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பார்த்திபன்,நான் எப்போதோ எங்கேயோ கூறியதை கூர்ய கவனக்கார நண்பர்-நினைவுக் கூறும் போது அக்கவிதையின் கவுரவம் கூடுகிறது!!!

தனிமையின் எக்ஸ்ரேவான எனக்கதன் சுயம் அறிந்ததால் ….
தீவு என்றால் நாற்புறமும் நீரன்றி வேறு துணையற்ற தனிமைக் கூடு!
அதன் சோகமறிந்ததால் ‘‘தனியான தீவுக்கு துணையாகப் போய்விடலாமா?’ என யோசிப்பதாய் எழுதியிருந்தேன்.ஏதோ இல்லாமலே இருக்கிறேன் BBயில்!!! என்று பதிவிட்டு இருக்கிறார்.

அதாவது நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய முதல் எபிசோடிலேயே மக்களே கவரும் விதம் நிறைய தத்துவம் மற்றும் பொதுவான கருத்துக்களை பேசி இருந்தார். அதில் நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபனின் கவிதை ஒன்றில் சில நாள் தூரத்தில் தனியாக இருக்கும் தீவுக்கு துணையாக போய்விடலாமா என்று இருக்கும்.

ஒரு சில நாள் எழுந்திருக்கும் பொழுதே நம்மை மகாராஜா போல் உணர்ந்து எழுவோம் என பேசி இருந்தார். தன்னுடைய கவிதையை ஞாபகம் வைத்து இவ்வளவு பெரிய மேடையில் விஜய் சேதுபதி சொன்னதற்காகத்தான் பார்த்திபன் அவரை பாராட்டி தள்ளி இருக்கிறார்.

ஆரம்பமே ரணதனமாகவும் பிக் பாஸ் வீடு

Trending News