நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர் பார்த்திபன். இவர் எல்லாவற்றையுமே வித்தியாசமான கோணத்தில் பார்க்க கூடியவர். இந்நிலையில் இவர் இயக்கத்தில் வெளியான ஒத்த செருப்பு படம் பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் கின்னஸ் சாதனைக்காக ஒரு படத்தை இரண்டு வருடங்களாக தயார் செய்து வருகிறார் பார்த்திபன்.
அதாவது இரவின் நிழல் என்ற படத்தை சிங்கிள் ஷாட்டில் பார்த்திபன் எடுத்துள்ளார். மேலும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி அனைவரையும் மிரளச் செய்தது. ஒரு பத்ர காளியின் கையில் துப்பாக்கியுடன் இருப்பது போன்றும் அதன்கீழே மண்டியிட பார்த்திபன் அலறுவது போல போஸ்டர் இருந்தது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இரவின் நிழல் படத்தை ஒரு ஸ்பெஷல் ஷோவாக பார்த்திபன் அவருடைய நண்பர்களுக்கு போட்டு காட்டியுள்ளார். ஆனால் அதைப் பார்த்த எல்லோரும் இதை நிச்சயமாக சிங்கிள் ஷாட்டில் எடுத்திருக்க முடியாது என கூறுகிறார்கள்.
மேலும் ஏதோ கோல்மால் பண்ணி தான் இப்படி எடுத்திருக்கிறீர்கள் என பலரும் பார்த்திபனை விமர்சித்து வந்தனர். அதேபோல் இப்படத்தில் 6 பாடல்கள் உள்ளதாம். இதனால் எப்படி ஒரே காட்சியில் இதை எடுக்க முடியும் கண்டிப்பாக இது சாத்தியமில்லாதது என கூறியுள்ளனர்.
கின்னஸ் ரெக்கார்டு ஆய்வாளர்களும் இதை ஒரே ஷாட்டில் எடுத்திருக்க முடியாது என கூறியுள்ளனர். அதன் பிறகு வேறு வழியில்லாமல் பார்த்திபன், படத்தின் மேக்கிங் வீடியோவை போட்டு காண்பித்துள்ளார். அதைப் பார்த்து எல்லோரும் அரண்டு போய் உள்ளனர்.
மேலும் அந்த வீடியோவை பார்த்த பலரும் பார்த்திபனை பாராட்டி உள்ளனர். ஏற்கனவே இப்படத்தின் ஷூட்டிங் போது ஏ ஆர் ரகுமான் பார்வையிட்ட மிரண்டு போய் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரவில் நிழல்படம் நிச்சயமாக கின்னஸ் சாதனை படைத்து ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்படும் என பலரும் தெரிவித்துள்ளனர்.