Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

அஜித்தைப் பார்த்ததும் பார்த்திபன் செய்த காரியம்..வெட்கத்தில் நெளிந்த AK!

அஜித்தைப் பார்த்ததும் பார்த்திபன் செய்த காரியம்..வெட்கத்தில் நெளிந்த AK!

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் ‘தலஅஜித்:. படங்களில் மட்டுமின்றி,அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சுவாரஸ்யமான தருணங்களும் அடிக்கடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்ற இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் கலந்துகொண்டது பேசுபொருளானது.


இந்த நிகழ்ச்சியில் அஜித் கருப்பு நிற கோட் அணிந்து மிகவும் ஸ்டைலாக வந்திருந்தார்.அப்போது ஷாலினியுடன் அவர் பகிர்ந்துகொண்ட ஒரு அழகான தருணம் தொடர்பான போட்டோவும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.குறிப்பாக,ஷாலினியைத் தெரியாமல் இடித்துவிட்டு அஜித் வெளிப்படுத்திய அந்த க்யூட்டான ரியாக்ஷன் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.


இந்தப் போட்டோவை பார்த்த நடிகரும் டைரக்டருமான பார்த்திபன்,அஜித்திடம் நேரடியாகவே தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார்.அதாவது,அந்தப் போட்டோவைக் காட்டி அஜித்தைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு,இந்த ரொமான்டிக் லுக்கிற்கே உங்களுக்கு 100 கோடி ரூபாய் கொடுக்கலாம் என்று கூறியதாக தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.இதைக் கேட்டு அஜித் வெட்கப்பட்டதையும் காமெடியாக பகிர்ந்துள்ளார்.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.