ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

மருமகன் வேலையை கெடுத்த பார்வதி.. நடுரோட்டுக்கு வந்த கதிர், முல்லை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தற்போது விறுவிறுப்பான கதை களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. அதாவது கதிர் ஹோட்டலில்தான் வேலை பார்க்கிறார் என்ற விஷயம் அவரின் மாமனார், மாமியாருக்கு தெரிந்துவிட்டது. இதனால் முல்லை இடம் அவரது அப்பா கதிர் ஹோட்டலில்தான் வேலை பார்க்கிறார் என்ற விஷயத்தை சொல்லிவிட்டார்.

மேலும் முல்லையின் அம்மா பார்வதி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு சென்று அங்கு உள்ளவர்களை சாபம்விட்டு வந்தார். மறுநாள் கதிர் அதே ஹோட்டலுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது பார்வதி அங்கு வந்து இந்த வேலை வேண்டாம் வந்துடுங்க என கதிரை வற்புறுத்துகிறார். ஆனால் கதிர் இந்த வேலையை விட்டுபோக மறுக்கிறார்.

மேலும் முதலாளி இங்கே என்ன வெட்டிகதை பேசுகிற என கதிரை திட்டுகிறார். இதைப் பார்த்த பார்வதி உன் வேலை ஒன்னும் வேணா என அந்த முதலாளியை கண்டபடி திட்டுகிறார். இதனால் கதிர் இதுவரைக்கும் வேலை பார்ப்பதற்கு சம்பளத்தை கொடுத்து அவரை வேலையை விட்டு நீக்கிவிட்டார் முதலாளி.

தற்போது வேலை பறிபோய் விட்டதே என்ற கவலையில் கதிர் உள்ளார். இந்நிலையில் கண்ணன் கயல் பாப்பாவை அழைத்துக் கொண்டு முல்லை வீட்டிற்கு செல்கிறார். ஆனால் இங்கு குழந்தையை காணும் என்று தனம் மற்றும் மீனா இருவரும் பதரி போகின்றனர்.

அதன்பின்பு கண்ணன் முல்லை அண்ணி வீட்டுக்கு தான் கயலை அழைத்துச் சென்றேன் என கூறுகிறார். உடனே மீனா கோபமடைந்து கண்ணனை திட்டுகிறார். அதன்பின்பு கதிருக்கு வேலை போன விஷயம் முல்லைக்கு தெரியவருகிறது. இதனால் புதிய தொழில் ஒன்றை ஆரம்பிக்கலாம் என முல்லை யோசனை சொல்கிறார்.

ஆனால் என்ன தொழில் செய்வது என்ற குழப்பத்தில் கதிர் உள்ளார். அதாவது மல்லிகை கடை ஆரம்பித்தால் அது தனது அண்ணன் கடைக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால் வேறு தொழில் செய்யலாம் என்ற யோசனையில் கதிர் உள்ளார். மேலும் முல்லை, நாமலே ஒரு ஹோட்டல் நடத்தலாம் என்ற யோசனையை சொல்ல அதிக வாய்ப்புள்ளது.

Trending News