சனிக்கிழமை, பிப்ரவரி 22, 2025

சிங்கப்பெண்ணில் அன்பு-ஆனந்திக்கு நெருக்கடி கொடுக்கும் பார்வதி.. முழு வில்லி அவதாரம் எடுக்கும் வார்டன்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

மகேஷ் காதலுக்கு ஓகே சொல்லி ஆனந்தியை தன் மருமகளாக ஏற்றுக் கொள்வதாய் எல்லோரும் முன்னிலையிலும் பார்வதி சொல்லியிருந்தார்.

இது மித்ராவுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அதே நேரத்தில் ஆனந்தி மற்றும் அன்பு நிலைகுலைந்து போய்விட்டார்கள்.

அன்பு-ஆனந்திக்கு நெருக்கடி கொடுக்கும் பார்வதி

மித்ரா பார்வதியை தனியாக அழைத்து வந்து என்ன நடக்கிறது என்று கேட்கிறாள். இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பார்வதி தன்னுடைய திட்டத்தை பற்றி மித்ராவிடம் சொல்கிறார்.

அன்பு மற்றும் ஆனந்தி இருவருக்கும் நான் கொடுக்கப் போகும் திருமண நெருக்கடியில் அவர்களே தங்களுடைய காதலை வாயைத் திறந்து சொல்வார்கள்.

இதனால் மகேஷ் அவங்க ரெண்டு பேரையும் வெறுத்து ஒதுக்கி விடுவான் என பார்வதி தன்னுடைய திட்டத்தை சொல்கிறார்.

அதே நேரத்தில் ஆனந்தி தன்னுடைய வீட்டுக்கு போன் பண்ணி என்ன நடந்தது என அவளுடைய தங்கையிடம் கேட்கிறாள்.

சுயம்புலிங்கம் கொடுத்த நெருக்கடியால் அழகப்பன் மகேஷ் தான் என் மருமகன் என வாக்கு கொடுத்ததை பற்றி தெரிந்து கொள்கிறாள்.

என்ன செய்வது என்று தெரியாமல் நேரடியாக ஹாஸ்டல் வார்டன் மனோன்மணியிடம் அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் செல்கிறார்கள்.

ஆனந்தி அன்பு தான் அழகன் என்றும் அவர்கள் இருவரும் காதலிப்பதையும் சொல்கிறாள். இந்த காதலை தெரிந்து கொண்ட வார்டன் ஆனந்தியின் காதலுக்கு உதவுகிறாரா அல்லது வில்லியாக மாறுகிறாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News