Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், ராகினிக்கும் அஜய்க்கும் நிச்சயதார்த்த வேலைகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த நிச்சயதார்த்தத்தை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என்று காவேரி ஏதோ ஒரு பிளான் பண்ணி வைத்திருக்கிறார். அதன்படி நிச்சயதார்த்தத்திற்கு நானும் வருவேன் என்று அனைவரிடமும் சொல்லி காவிரி தயாராகி விட்டார்.
இதை பார்த்துக் கொண்டிருந்த விஜய், காவேரியிடம் இந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்துவதற்கு பல ஏற்பாடுகளை செய்தாய். அப்படி இருக்கும் பொழுது முதல் ஆளாக வருகிறேன் என்று சொல்வது சந்தேகமாக இருக்கிறது. நிச்சயதார்த்தத்தை நிறுத்துவதற்கு ஏதாவது உன்னிடம் பிளான் இருக்கிறதா என்று விஜய் கேட்கிறார்.
அப்பொழுது அதை எல்லாம் நாளைக்கு பாருங்கள் என்று சொல்லி பழைய ஞாபகங்களை நினைவு கூர்ந்து விஜய் இடம் பேசுகிறார். அப்பொழுது காவிரியின் அப்பா இறப்பிற்கு காரணமான பசுபதியை பற்றி சொல்லி கவலையுடன் பேசுகிறார். இதைக் கேட்டதும் விஜய்க்கும் கண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது.
ராகினிக்கு எதிராக பிளான் பண்ணிய காவேரி
ஆனால் அஜய்யின் அப்பாவிற்கு மட்டும் ஏதோ குழப்பமாகவே இருக்கிறது. அதாவது பொண்ணு பார்ப்பதற்கு கூட காவிரி வரமாட்டேன் என்று அடம்பிடித்தார். இப்போ நிச்சயதார்த்தத்திற்கு கூப்பிடாமலே கிளம்பி இருக்கிறார்களே என்ன பண்ணப் போகிறார் என்று ஒரு பயம் ஏற்பட ஆரம்பித்து விட்டது.
அதற்கு அஜய், காவிரி எல்லாம் ஒரு பெரிய ஆளே கிடையாது. எல்லாத்தையும் என் மாமனாரு பார்த்துக் கொள்வார் என்று சொல்லுகிறார். இதனைத் தொடர்ந்து கோவிலில் விஜய் குடும்பத்திற்காக பசுபதி காத்துக் கொண்டிருக்கிறார். அதே மாதிரி முதலில் அஜய், அப்பா, அம்மா அனைவரும் கோவிலுக்கு வந்து விட்டார்கள்.
இவர்களை தொடர்ந்து தாத்தா காரில் விஜய் மற்றும் காவிரியும் போய்விட்டார்கள். ஆனால் காவிரி இறங்கும் பொழுது விஜய் ஒரு அடியேனாக மாறி காவிரிக்கு கார் கதவை திறந்து விட்டு மனைவியை அனைவரும் முன்னாடியும் கெத்தாக காட்டுகிறார். இதை பார்த்த பசுபதிக்கு வயிற்றெரிச்சல் தாங்க முடியவில்லை.
இதனை தொடர்ந்து ராகினி பற்றிய ஏதோ ஒரு விஷயத்தை அஜய்க்கு வெட்ட வெளிச்சமாக காட்டப் போகிறார் என்பது மட்டும் புரிகிறது. அதன் மூலம் இந்த நிச்சயதார்த்தத்தை நடத்த விடாமல் பசுபதி கண்ணில் விரலை விட்டு ஆட்டலாம் என்று காவேரி பிளான் பண்ணி இருக்கிறார். அந்த வகையில் காவிரிக்கு முழு ஆதரவையும் கொடுக்கும் விதமாக அதை கூடவே இருந்து அனைத்து வேலைகளையும் விஜய் பார்க்கப் போகிறார்.
ஆக மொத்தத்தில் ராகினிக்கு இந்த ஒரு கல்யாணமும் தடங்கலாக தான் இருக்கப் போகிறது. ஆனால் அஜய், ராகினி மீது பைத்தியமாக இருப்பதால் எப்படியும் கல்யாணத்தை பண்ணி விடுவார் என்பது போல் தோன்றுகிறது. ஆனாலும் கதை படி ராகினி அஜய்யை கல்யாணம் பண்ணிட்டு விஜய் வீட்டுக்கு வந்தால் தான் காவேரிக்கும் ராகினிக்கும் யுத்தம் நடக்கும் வகையில் கதை நீடிக்கும் என்பதால் கல்யாணம் நடக்க வாய்ப்பு இருக்கிறது.