சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

வசூலுக்காக மானத்தை அடகு வைத்த பவி டீச்சர்.. கூடவே இருந்து ஒத்து ஊதிய பார்த்திபன்

பார்த்திபன் இயக்கத்தில் சிங்கிள் ஷாட்டில் உருவான இரவின் நிழல் திரைப்படம் பாராட்டுகளை பெற்று வந்தாலும் அளவுக்கு அதிகமான சர்ச்சைகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த அந்த திரைப்படம் தற்போது கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.

அந்த வகையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்த பிரிகிடா இப்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு சேரி மக்கள் குறித்து சில கருத்துக்களை பேசியதற்காக இவருக்கெதிராக பல எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்தது.

இதனால் அவர் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். அந்தப் பிரச்சினையே இப்போதுதான் சற்று ஓய்ந்திருக்கிறது. இந்நிலையில் அவர் படத்தில் மிகவும் சர்ச்சையாக பார்க்கப்பட்ட ஒரு காட்சியை பற்றிய சில உண்மைகளை தெரிவித்துள்ளார்.

அதாவது அவர் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய காட்சியில் ஆடை இல்லாமல் நடித்திருந்தார். கதைக்கு தேவைப்பட்ட காரணத்தால் தான் அப்படி நடித்திருந்ததாக அவர் பலமுறை பேட்டிகளில் தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது அந்த காட்சியில் பிரிகிடா ஸ்கின் போன்ற ஒரு ஆடையை அணிந்துதான் நடித்துள்ளதாக பிரபல நாளிதழில் செய்திகள் வெளியாகி உள்ளது.

படம் வெளியாகி இத்தனை நாட்கள் கடந்த பிறகு தற்போது அவரே இந்த உண்மையை பற்றி வாய் திறந்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது, அந்த காட்சியில் நான் மிகவும் குட்டியான ஸ்கின் நிறத்தில் டிரஸ் அணிந்திருந்தேன். ஆனால் அதைப் பார்த்தால் நான் டிரஸ் அணிந்திருப்பது போன்று தெரியாது என்று கூறியுள்ளார். மேலும் அதை கிராபிக்ஸ் மூலம் மாற்றி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் படத்தின் விளம்பரத்திற்காகவும், வசூலுக்காகவும் இப்படி கேவலமான ஒரு விஷயத்தை பட குழு செய்துள்ளதாக பேசி வருகின்றனர். மேலும் பார்த்திபன் போன்ற மிகப்பெரிய இயக்குனர் இது போன்ற வேலைகளை செய்யலாமா என்றும் அவர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். பட விளம்பரத்திற்காக இப்படி ஒரு விஷயத்திற்கு பார்த்திபனும் ஒத்து ஊதியிருக்கிறார் என்ற பேச்சு கோலிவுட்டில் தற்போது பரவிக் கொண்டிருக்கிறது.

Trending News