புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அடுத்தடுத்து புக்கிங் செய்ய காத்திருக்கும் இயக்குனர்கள்.. ஆனாலும் நொந்து போன பவி டீச்சர்

தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வரும் இரவின் நிழல் திரைப்படத்தின் மூலம் பார்த்திபன் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறார். மிகவும் கஷ்டப்பட்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு தற்போது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் படக்குழுவினர் அனைவரும் தற்போது அதிக கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். ஆனால் இப்படத்தில் நடித்த ஒரே ஒரு நபர் மட்டும் தற்போது கடும் மன உளைச்சலில் இருக்கிறாராம். அவர் வேறு யாரும் அல்ல ரசிகர்கள் மத்தியில் இப்போது பிரபலமாகி கொண்டிருக்கும் பவி டீச்சர் தான்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அவருக்கு தற்போது ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம். ஆனாலும் அதையெல்லாம் ஏற்க முடியாத நிலையில் அவர் இருந்து வருகிறார். ஏனென்றால் அவருக்கு வரும் வாய்ப்புகள் அனைத்தும் படுக்கையறை காட்சிகள் மற்றும் பலான காட்சிகள் கலந்த கேரக்டராகவே இருக்கிறதாம்.

இரவின் நிழல் திரைப்படத்தில் கதையின் தேவைக்காக நி**வாண காட்சியில் நடித்திருக்கும் அவரின் தைரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால் இதையே சாக்காக வைத்து தற்போது பல இயக்குனர்களும் அதே போன்ற கதையமைப்புடன் இவரை தேடி வருகிறார்களாம்.

அது மட்டுமல்லாமல் பா**யல் சம்பந்தமான தொல்லைகளும் இவருக்கு அதிகமாகி வருகிறதாம். இப்படி ஒரு காட்சியில் நடித்துவிட்ட காரணத்திற்காக அவரை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி கேட்கும் நபர்களால் பவி டீச்சர் தற்போது அதிக மன அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தொல்லைகளை தாங்க முடியாமல் அவர் தற்போது தன்னுடைய போன் நம்பரை கூட மாற்றி விட்டாராம். ஆனாலும் அவரை தேடி இது போன்ற பல வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருப்பதால் என்ன செய்வது என்ற யோசனையில் அவர் இருக்கிறாராம். சினிமாவில் சாதிக்க துடித்த அவர் இது போன்ற பிரச்சனைகளை தாங்க முடியாமல் தனது நெருக்கமானவர்களிடம் குமுறி வருகிறாராம்.

Trending News