சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

மணிக்கு ஒரு ப்ரோமோவா.? கேம் சேஞ்சர் பவித்ரா, பிக்பாஸ் வீட்ல என்னதான் நடக்குது

Biggboss 8-Pavithra: புயல் வேகத்துல போயிட்டு இருக்கேன் குறுக்க மண்ணு லாரி எதுவும் வந்துடக்கூடாது. அப்படித்தான் இன்று பிக்பாஸ் வீடு இருக்கிறது. என்னையா நடக்குது வீட்டுக்குள்ள, மணிக்கு ஒரு ப்ரோமோவா என்று தான் கேட்க தோணுது.

அந்த அளவுக்கு முழு நிகழ்ச்சியை ப்ரோமோவிலேயே காட்டி விடும் முயற்சியில் டீம் இருக்கிறது போல. தற்போது வரை ஐந்து ப்ரோமோக்கள் வந்துவிட்டது.

இன்னும் ஐந்து ப்ரோமோக்களை கூட நாம் எதிர்பார்க்கலாம். அதன்படி தற்போது வீட்டில் சாத்தான்களின் ஆட்டம் அதிகமாகிவிட்டது. அதில் மஞ்சரி பவித்ராவை படுத்தும் பாட்டை பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது.

கேம் சேஞ்சர் பவித்ரா

முட்டையை உடைத்து வாயில் ஊற்றுவது, முகத்தில் பூசிக்கொள்ள சொல்வது என மருமகளை மாமியார் கொடுமைப்படுத்துவது போல் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் டாஸ்க் என்பதால் பவித்ரா பொறுமையோடு இருக்கிறார்.

சொல்வது அனைத்தையுமே செய்யும் அவரை தர்ஷிகா மூளை சலவை செய்ய பார்க்கிறார். ஒரு பொண்ணு இப்படி உன்ன கொடுமை படுத்துறா இப்பவும் நீ தேவதையா இருக்கணும்னு அவசியம் இல்லை என தன் வேலையை காட்டுகிறார்.

ஆனாலும் பவித்ரா சிரித்த முகத்தோடு இருக்கிறார். தனிமையில் இதை நினைத்து அவர் அழும் ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது. இதன் மூலம் அவருக்கான ஆதரவும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

போற போக்கை பார்த்தால் பவித்ரா டாப் 5 லிஸ்டில் இடம் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அந்த அளவுக்கு அவருடைய பர்பாமன்ஸ் சிறப்பாக இருக்கிறது. அதே போல் ஆட்டத்தை மாற்றும் கேம் சேஞ்சராகவும் மாறியுள்ளார்.

Trending News