Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்களின் நண்பர்கள் வீட்டுக்குள் வந்தனர். அதில் பவித்ராவுக்கு சப்போர்ட் செய்யும் விதமாக சமந்தா வந்திருந்தார்.
இருவரும் பல சீரியல்களில் ஒன்றாக இணைந்து நடித்திருக்கின்றனர். சொல்லப்போனால் பவித்ராவுக்கு சமந்தா சொந்த சகோதரி போல் தான்.
இதை அவர் நிகழ்ச்சியிலேயே ஒரு முறை வெளிப்படையாக சொல்லியிருந்தார். ஆனால் இன்று லைவ் காட்சிகளை பார்க்கும்போது அவர் கூறியது எந்த அளவுக்கு உண்மை என புரிந்தது.
உண்மையிலேயே பவித்ராவுக்கு சமந்தா சரியான ஆலோசனையும் அன்பையும் கொடுத்தார். அதேபோல் மஞ்சரியின் திமிரை அவர் அடக்கியதும் பாராட்டப்பட்டு வருகிறது.
மஞ்சரியின் திமிரை அடக்கிய பவித்ராவின் கெஸ்ட்
ஏனென்றால் மஞ்சரி நான் மட்டும் டெவில் டாஸ்க்கில் முட்டை ஊத்தலன்னா பவித்ரா வெளில தெரிஞ்சிருக்க மாட்டா என நக்கலாக சிரித்தபடி கூறினார். இது பார்ப்பவர்களுக்கு எரிச்சலாக இருந்தது.
சமந்தாவும் அதையே தான் கூறினார். நீங்க ஸ்பேஸ் கொடுத்திருந்தாலும் பவித்ரா அதை சரியா பயன்படுத்திக்கிட்டா. அதனால மொத்தம் கிரெடிட் உங்களுக்கு கிடையாது என கூறினார்.
இதனால் அதிர்ச்சியான மஞ்சரி ஆமாம் கரெக்ட் என மழுப்பியபடி பதில் சொன்னார். உண்மையிலேயே சமந்தா வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என பேசியது மிகச்சரியானது.
அதுவும் மஞ்சரி வருவதற்கு முன்பே பவித்ரா பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தார் என அவர் சொன்னது கரெக்டான பாயிண்ட். அதைத்தான் தற்போது நெட்டிசன்கள் வைரல் செய்து வருகின்றனர்.
உண்மையிலேயே பவித்ராவுக்கு இருக்கும் பொறுமையும் மனதிடமும் யாருக்கும் கிடையாது. நிச்சயம் அவர் இறுதி நாள் வரை வீட்டுக்குள் இருப்பார் என்ற வாழ்த்துக்களும் இப்போது பரவி வருகிறது.
மேலும் இந்த வாரம் குடும்பத்தினர் வருகையால் போட்டியாளர்கள் கொஞ்சம் குழப்பத்தில் தான் இருக்கின்றனர். வெளியில் பார்த்ததை வைத்து ஆளாளுக்கு ஒரு அறிவுரை சொன்னார்கள்.
இதில் எதை எடுத்துக் கொள்வது எப்படி விளையாடுவது என்ற குழப்பம் அனைவருக்கும் இருக்கிறது. அடுத்த வார டாஸ்க்கில் இது பிரதிபலிக்கலாம்.
எது எப்படியோ இனி வரும் டாஸ்க் கடுமையாக இருக்கும். அதனால் திறமையானவர்கள் மட்டுமே இனி வீட்டில் நீடிக்க முடியும்.