திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஹீரோவிடம் வசமாக சிக்கக்கொண்ட நடிகை.. தப்பிக்க முடியாமல் வச்சு செய்யும் பரிதாபம்

தமிழ் சினிமாவில் சிம்பு நடித்த வானம் படத்தின் இயக்குனரான தெலுங்கில் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக இயக்க வேண்டும் என்று நினைத்தவர் இந்த படத்திற்கு கதாநாயகனாக பவன் கல்யாணை தேர்ந்தெடுத்திருக்கிறார். ஹர ஹர வீர மல்லு என்ற படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர் அர்ஜுன் ராம்பால் போன்ற பலர், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்தப் படத்தின் ஹீரோவான பவன் கல்யாண் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருவதால் அவரால் இந்த படத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. ஏகப்பட்ட கமிட்மெண்ட் இருக்கும் அவர் இந்த படத்தின் சூட்டிங்கிற்கு சரியாக வருவதில்லை. அதனால் இயக்குனர் கொடுத்த கால்சீட்டை தாண்டி இந்தப் படம் சென்றுகொண்டிருக்கிறது. இப்படி தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பதால் தயாரிப்பாளரும் மிகுந்த அப்செட்டில் இருக்கிறார்.

இப்படி இருக்கும்போது இந்தப் படத்தில் தேவையே இல்லாமல் நிதி அகர்வால் கமிட்டாகியிருக்கிறார். நிதி அகர்வால் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாகவும், கவர்ச்சி கன்னியாகவும் வலம் வருபவர். இவர் இந்த படத்திற்கு அவ்வளவு பெரிய முக்கியமான கதாபாத்திரத்திற்காக தேர்ந்தெடுக்கப்படவில்லை.

சாதாரண கதாபாத்திரத்திரமாக, ஓரிரு காட்சிகளில் வந்து செல்லும் ஒரு கதாபாத்திரத்தை தான் இவருக்கு கொடுத்து இருக்கின்றனர். அப்படி இருக்கையில் பவன் கல்யாண் இந்த படத்தை தொடர்ந்து இழுத்துக் கொண்டே செல்வதால் இதில் தேவையில்லாமல் கமிட்டான நிதி அகர்வாலுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

படத்தை சீக்கிரம் முடியுங்கள் எனக்கு முக்கியமான கமிட்மெண்ட் இருக்கிறது என்று அவர் தொடர்ந்து படக்குழுவை கேட்டு வருகிறாராம். ஆனால் பவன் கல்யாணை வைத்துக்கொண்டு, படக்குழு படத்தை முடிக்க முடியாமல் திணறி வருகிறது. நிதி அகர்வாலுக்கு இதனால் பல வாய்ப்புகள் கை மீறி சென்று கொண்டிருக்கிறதாம்.

வாய்ப்புகள் அனைத்தும், கைநழுவி செல்வதால் எப்படியாவது இந்த படத்தில் இருந்து எஸ்கேப் ஆகிவிட வேண்டும் என்று அவர் நினைத்திருந்தாலும் ஒப்பந்தம் போடப்பட்டு இருப்பதால் அவரால் எங்கும் செல்ல முடியவில்லை. கண்டிப்பாக இந்த படத்தில் நடித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் நிதி அகர்வால் விழிபிதுங்கி நிற்கிறார்.

Trending News