திங்கட்கிழமை, டிசம்பர் 2, 2024

பிக்பாஸ் டீமோடு சேர்ந்து தொக்காக மாட்டிய விஜய் சேதுபதி.. TRP-க்காக இப்படியெல்லாமா பண்ணுவீங்க?

Bigg Boss 8: விஜய் டிவியை பொறுத்த வரைக்கும் டிஆர்பிக்காக எந்த லெவலுக்கு வேணா போவார்கள் என்பது தான் மக்களின் கருத்து. அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது இந்த சேனல். விஜய் டிவியில் ரொம்பவும் ஃபேமஸான ரியாலிட்டி நிகழ்ச்சி பிக் பாஸ்.

பல சர்ச்சைகளுக்கு நடுவே வெற்றிகரமாக எட்டாவது சீசனை கடந்த அக்டோபர் ஆறாம் தேதி ஆரம்பித்திருக்கிறார்கள். எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை பாய்ஸ் ஒரு டீம் கேர்ள்ஸ் ஒரு டீம் என பிரித்திருப்பது ஒரு சில நேரங்களில் சலிப்பாக இருந்தாலும், ஒரு சில நேரங்களில் சுவாரசியமாகவும் இருக்கிறது.

பெரிய அளவில் நெகட்டிவ் விமர்சனத்தை இந்த சீசன் பெற்றிருந்தாலும் மக்களிடையே கொஞ்சம் வரவேற்பும் இருக்கிறது. நிகழ்ச்சியோடு சேர்த்து நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதியும் சில நேரம் மக்களிடையே பேச்சு வாங்க வேண்டிய சூழலும் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது.

TRP-க்காக இப்படியெல்லாமா பண்ணுவீங்க?

இந்த நிலையில் புதிய பஞ்சாயத்து ஒன்று கிளம்பி இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் சுவாரசியமே வார இறுதி நாட்களில் தொகுப்பாளர் வந்து போட்டியாளர்களை ரோஸ்ட் பண்ணுவது தான். அப்படித்தான் இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சம்பவம் நடந்தது.

கடந்த வார சனிக்கிழமை சென்னை மக்களால் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. பெஞ்சல் புயல் ஏற்பட்டு சென்னையை புரட்டிப் போட்டு விட்டு போய்விட்டது. புயலுக்கு முன்பே மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, அலுவலகங்களில் WFH அனுமதி கொடுக்க வேண்டும் என ஏகப்பட்ட அரசு உத்தரவுகள் வந்துவிட்டது.

இதை தாண்டி சனிக்கிழமை நடந்த பிக் பாஸ் ஷூட்டிங்கில் பொதுமக்கள் கலந்து கொண்டதுதான் இப்போது பெரிய அளவில் பிரச்சனையை கிளப்பி இருக்கிறது. அது எப்படி அரசாங்கம் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்று சொல்லியும் சாமானிய மக்களை நிகழ்ச்சிக்கு அழைத்து உட்கார வைத்திருப்பார்கள் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த விஷயம் அரசு கவனத்தை ஈர்க்குமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -spot_img

Trending News