என்னை அவமானப்படுத்த நடக்கும் சதி.. உண்மையை ஒரே போடா போட்ட பார்த்திபன்

parthipan
parthipan

ஆஸ்கர் வாங்க வேண்டுமென்ற ஆசை நீண்ட காலமாக பார்த்திபன் மனதில் இருந்து வருகிறது. இப்பொழுது அவர் எடுத்திருக்கும் படம் இரவின் நிழல். இந்த படம் ரிலீசாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஏற்கனவே அவர் எடுத்த ஒத்த செருப்பு படம் ஆஸ்கர் வரை சென்று தோல்வியடைந்தது. இருந்தாலும் மனம் தளராமல் ஆஸ்கர் வாங்கியே தீருவேன் என்று பார்த்திபன் இன்றுவரை போராடிக் கொண்டிருக்கிறார். இப்பொழுது இரவின் நிழல் படத்திற்கு பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்.

இந்த படத்திற்காக காசு தரவேண்டும் என்று பார்த்திபன் மீது கோர்ட்டில் ஒருவர் வழக்கு தொடர்ந்து அதை பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளார். இந்தப்படத்தில் கேமரா கொடுத்த டெக்னிசியன் பாஸ்கர் என்பவருக்கு 17 லட்ச ரூபாய் பாக்கி இருக்கிறது என்று கோர்ட்டில் ஸ்டே வாங்கி விட்டார்.

இப்படி கோர்ட்டில் கேஸ் போட்டதால் இந்த படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் ஆரம்பத்தில் பெரிய யோசனையில் இருந்துள்ளனர். இந்தப் படம் குறிப்பிட்ட தேதியில் ரிலீசாகுமா என்ற மன சங்கடம் அவர்களுக்கு ஏற்பட்டது. இப்படி என்னை அவமானப்படுத்தும் திட்டத்தில் யார் யாரெல்லாம் பின்னிருந்து வேலை செய்கிறார் என்பது தெரியவில்லை.

இதனால் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளான பார்த்திபன் நான் யாரையும் ஏமாற்றியது கிடையாது ஏன் இப்படி என்னை அவமானப்படுத்த சதி நடக்கிறது என்று தெரியவில்லை என்று புலம்பிவருகிறார்.

ஆனால் எல்லாவற்றையும் சரி செய்த பார்த்திபன் படத்தை குறிப்பிட்ட நேரத்தில் ரிலீஸ் செய்து வெற்றி பெற்றுள்ளார்.ஒருவர் வளர்ச்சியை தடுப்பதற்கு வேறு ஒருவர் புதிதாய் வருவதில்லை கூடவே இருந்து வேலை பார்ப்பவர்கள் தான் காரணம் என்றும் கூறியுள்ளார் பார்த்திபன்.

Advertisement Amazon Prime Banner