புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா.. அஜித் பெயரை வைத்து வாய் கூசாமல் புளுகும் பேரரசு

இயக்குநர் பேரரசு தமிழ் சினிமாவில் ஊர்களின் பெயர்களை வைத்து பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இவர் விஜய், அர்ஜுன், விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களையும் வைத்து படங்களை இயக்கியிருக்கிறார். அந்த வகையில் இவர் நடிகர் அஜித்தை வைத்து திருப்பதி என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

ஏவிஎம் புரொடக்சன்ஸ் தயாரித்திருந்த இந்த திரைப்படத்தில் சதா அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அண்ணன், தங்கை பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. ஏனென்றால் பேரரசு இந்த படத்திற்கு முன்பு திருப்பாச்சி என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

அந்தப் படமும் அண்ணன், தங்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் தான். அதனால் இந்த இரண்டு படங்களும் ஒரே சாயலில் இருக்கிறது என்ற கருத்து அப்போது பரவியது. மேலும் அஜித் ரசிகர்களும் அஜித் ஏன் இந்த படத்தில் நடித்தார் என்றும் கூறிவந்தனர்.

இப்படி பல கலவையான விமர்சனங்களை சந்தித்த இந்த திரைப்படத்தை பற்றி தற்போது பேரரசு ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். உண்மையில் திருப்பதி படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படம்தான் என்றும், 100 நாட்கள் வரை ஓடி சாதனை படைத்தது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இப்போதெல்லாம் ஒரு படத்திற்கு ஏகப்பட்ட பிரமோஷன்கள் செய்யும்போது இடத்திற்கு நாங்கள் எந்தவித பிரமோஷனும் செய்யவில்லை. ஏனென்றால் ஓடாத படத்திற்கு தான் விளம்பரம் தேவை. இந்தப் படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தை வாங்கி வெளியிட்ட அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் இது லாபத்தை மட்டுமே கொடுத்தது. அந்த வகையில் இது ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படம் என்று அவர் கூறியிருக்கிறார். தற்போது இதைப் பார்த்த அஜித்தின் ரசிகர்கள் உங்களுக்கு மனசாட்சியே இல்லையா, இப்படியா வாய் கூசாமல் பேசுவது என்று அவரை விமர்சித்து வருகின்றனர்.

Trending News